அதிர்ச்சி தரும் சம்பவம்... வெங்காயம் வாங்க வரிசையில் நின்றவர் மாரடைப்பில் மரணம்...!

 • Share this:
  வெங்காயம் வாங்க வரிசையில் நின்றவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  ஒவ்வொரு நாளும் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொட்ட வண்ணம் உள்ளது. ஆந்திர மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகளில் ரூ.25-க்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கிலோ வெங்காயம் அரசு மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

  உழவர் சந்தைகளில் வெங்காயத்தின் விலை குறைவாக இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் வரிசையில் நின்று வெங்காயம் வாங்கி செல்கின்றனர். இதனால் உழவர் சந்தைகளில் மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை பொதுமக்களின் வரிசை நீண்டு வருகிறது.

  இந்நிலையில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா நகரிலுள்ள உழவர் சந்தையில் நேற்று மாலை வெங்காயம் வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த சாம்பையா என்பவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

  இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவமனை செல்லும் வழியிலேயே சாம்பையா மரணமடைந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Sheik Hanifah
  First published: