• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வெங்காயத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு.. மழை நீடித்தால் விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தகவல்..

வெங்காயத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு.. மழை நீடித்தால் விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தகவல்..

 வெங்காய விலை அதிகரிப்பு (கோப்பு படம்)

வெங்காய விலை அதிகரிப்பு (கோப்பு படம்)

திண்டுக்கல்  வெங்காய பேட்டையில் தொடர் மழை காரணமாக வெங்காய வரத்து குறைந்தது. இதனால் விலை உயர்வு  ஏற்பட்டு சென்ற மாதம் வரை 40 ரூபாய்க்கு விற்பனை ஆன சின்ன வெங்காயம் கிடுகிடுவென விலை உயர்ந்து 80 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Share this:
    மத்திய அரசு ச மீபத்தில் வெங்காயங்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த இந்தியாவில் விளையும் வெங்காயங்களை ஏற்றுமதி செய்ய அனுமதி இல்லை என்று  கூறியது. ஆனால் ஏற்றுமதிக்கு தடை விதித்தும் வெங்காதத்தின் விலை குறையவில்லை.மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

    திண்டுக்கலில் வெங்காயத்துக்கென்றே தனி வெங்காய சந்தை நடைபெறும். இங்கு திருப்பூர், தாராபுரம் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், தேனி, கம்பம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து  விவசாயிகள் வெங்காயங்களை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இங்கு வரும் வெங்காயங்களை வாங்க வியாபாரிகள் தமிழகம் இருந்து மட்டும் இன்றி கேரளா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏற்றுமதி செய்வார்கள்.

    சமீபத்தில் பெய்து வந்த மழைக்கு முன்பு வரை  2000 டன் சின்ன வெங்காயங்கள் வருகை தந்ததால் 40 ரூபாய்க்கு விற்பனை ஆன 1 கிலோ சின்ன வெங்காயம் தற்போது தொடர்  மழை காரணமாக பயிரிடப்பட்ட வெங்காயங்கள் சேதமடைந்து வரத்து குறைந்தது. இதனால் 1000 டன் வெங்காயங்களே சந்தைக்கு கொண்டுவரப்பட்டது.

    மேலும் படிக்க.. #BREAKING | காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் பொறுப்பிலிருந்து குஷ்பு நீக்கம்..



    இதனால் 40 ரூபாய்க்கு விற்பனை ஆன சின்ன வெங்காயம் கிடுகிடுவென என விலை உயர்ந்து 80 ரூபாய் வரை விலை ஏற்றமடைந்துள்ளது. மேலும் மழை நீடித்தால் 100 ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளது என்றனர் வியாபாரிகள். அதேபோல் பெரிய வெங்காயமும் 1 கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை ஆனது விலை உயர்ந்து 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: