முகப்பு /செய்தி /இந்தியா / “ஒரு உலகம், ஒரே சுகாதாரம்” - பிரதமர் மோடியின் புதிய முழக்கம்

“ஒரு உலகம், ஒரே சுகாதாரம்” - பிரதமர் மோடியின் புதிய முழக்கம்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

ஒரு உலகம், ஒரே சுகாதாரம் என்ற கொள்கையை இந்தியா முன்வைப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

வளர்ந்த நாடுகளின் மருத்துவ கட்டமைப்பே கொரோனா காலத்தில் சரிந்து கிடந்ததாகவும், உலகமே தற்போது சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் அதிகம் தருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த காணொலி கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, ஒரு உலகம், ஒரே சுகாதாரம் என்ற கொள்கையை இந்தியா முன்வைப்பதாக கூறியுள்ளார்.

இந்தியாவில் மலிவு விலையில் மருத்துவ சிகிச்சையை வழங்குவதே, மத்திய அரசின் நோக்கம் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சையின் பின்னணியில் உள்ள நோக்கம் இதுதான் என்றும் குறிப்பிட்டார். மேலும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், மருத்துவ சிகிச்சைக்காக செலவிடப்படும் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலேயே மருத்துவ பரிசோதனை வசதிகளைப் பெறுவதிலும், முதலுதவிக்கான சிறந்த வசதிகள் பெறுவதிலும் அரசு கவனம் செலுத்துவதாக குறிப்பிட்ட பிரதமர், பெரிய நோய்களையும் எதிர்கொள்ளும் வகையில் நாடு முழுக்க ஒன்றரை லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

First published:

Tags: Health and welfare department, PM Modi