மூன்றில் ஒரு சிறு, குறு நிறுவனம் மூடப்படும் நிலையில் உள்ளது - அகில இந்திய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு

மூன்றில் ஒரு சிறு, குறு நிறுவனம் மூடப்படும் நிலையில் உள்ளது - அகில இந்திய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு
மாதிரிப் படம்
  • Share this:
கொரோனா பொது முடக்கத்தால் மூன்றில் ஒரு சிறு, குறு நிறுவனம் மூடும் நிலைக்கு சென்றுள்ளதாக அகில இந்திய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிறு, குறு நிறுவனங்கள், சுய தொழில் புரிவோர், கார்ப்ரேட் நிறுவனங்களின் சி.இ.ஓ மற்றும் ஊழியர்களிடம் அகில இந்திய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கருத்து கேட்டது. அதில், 37% சுய தொழில் புரிவோரும், 35% சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் மீட்க முடியாத நிலைக்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 32% சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மீண்டு வர ஆறு மாதங்களாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.  ஏற்கனவே பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் பல இன்னல்களை சிறு, குறு நிறுவனங்கள் சந்தித்து வருவதும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Also see:
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading