ஜம்மு காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச்சூடு... தீவிரவாதி சுட்டுக்கொலை

துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச்சூடு... தீவிரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர்
  • News18
  • Last Updated: March 7, 2019, 8:40 AM IST
  • Share this:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து இந்தியாவின் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான். எல்லைப் பகுதிகளில் அவ்வப்போது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.


இதேபோல் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடும் நடைபெற்று வருகிறது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது வருகிறது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாரா மாவட்டம் ரல்குண்ட் பகுதியில் பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் பயங்கராவாதிகள் இடையே இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்க வாய்ப்பு இருப்பதால் அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


Also watch

First published: March 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading