தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கெச்பவுலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு இளம்பெண் ருக்கிசிங் (21) தன்னுடைய வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று நள்ளிரவுக்கு மேல் அவருடைய உறவினரான பிரேம் சிங் திடீரென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து ருக்கிசிங் படுக்கை அறைக்குள் சென்று தன்னிடம் இருந்த கத்தியால் ருக்கிசிங்கின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த. ருக்கிசிங் போட்ட அலறல் கேட்டு அங்கு வந்த அவருடைய பெற்றோர் பிரேம் சிங்கை பிடிக்க முயன்றனர். அப்போது ருக்கிசிங் கை, கால்களிலும் பிரேம்சிங் கத்தியால் வெட்டி காயப்படுத்தினார்.
இந்த நிலையில் அவரை பிடித்த ருக்கிசிங் பெற்றோர் தர்ம அடி கொடுத்து போலீசாரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். பிரேம் சிங்கை கைது செய்த போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிரேம் சிங்கின் காதலை ருக்கிசிங் ஏற்க மறுத்ததால் அவரை பிரேம் சிங் கொலை செய்ய முயன்றது தெரிய வந்துள்ளது. இரண்டு பேரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படுகாயமடைந்த ருக்கிசிங் அந்தப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.