தெலங்கானாவில் காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு!

தெலங்கானா வாராங்களில் ஆசிட் வீசப்பட்ட கல்லூரி மாணவி ரவளி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

தெலங்கானாவில் காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு!
அவினேஷ்
  • News18
  • Last Updated: February 27, 2019, 1:29 PM IST
  • Share this:
தெலங்கானாவில் தன்னை காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசி சென்றவரை போலீசார் கைது செய்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது. 

தெலங்கானா மாநிலம் வாரங்களில் உள்ள வாக்தேவி கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார் ரவளி. அதே கல்லூரியில் படிக்கும் அவினாஷ் என்பவர் ரவளியை காதலிப்பதாக பலமுறை தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு  ரவளி சம்மதிக்காமல் மறுத்து வந்துள்ளார்.

ஆசிட் வீசப்பட்ட மாணவி ரவளிஇதனால் ஆத்திரமடைந்த அவினாஷ், இன்று கல்லூரிக்கு சென்ற ரவளியின்  முகத்தில் ஆசிட்டை வீசி தாக்குதல் நடத்தினார். இதனால் சம்பவ இடத்திலேயே உடல் கருகி  மாணவி ரவளி படுகாயமடைந்தார். உடனே அங்கு அருகில் இருந்த சக மாணவ மாணவிகள் ரவளியை அருகில் உள்ள  சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் அவினாசை பிடித்த மற்ற மாணவர்கள், அவரை காவல் துறையினரிடம்  ஒப்படைத்துள்ளனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also see... ராணுவ தாக்குதல்களை இரு நாடுகளும் கைவிட வேண்டும் - அமெரிக்கா அட்வைஸ்
First published: February 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...