உ.பி. மதுராவில் பசுக்களை கடத்தியதாக ஒருவர் சுட்டுக்கொலை

மாதிரிப்படம்..

உத்தரப்பிரதேசம் மதுராவில் இறைச்சிக்காகப் பசுக்களை கடத்தியதாக ஷேர் கான் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

 • Share this:
  ஷேர் கானுடன் சிக்கிய 5 இளைஞர்களை போலீசார் பொதுமக்களிடமிருந்து காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். மதுராவின் கோசி கலன் காவல்நிலையப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றுள்ளது. இங்குள்ள துமோலா கிராமத்திலிருந்து ஆறு பசுக்களை வாகனத்தில் ஏற்றி ஆறு பேர் ஹரியாணாவிற்கு கடந்த முயற்சித்ததாகத் தெரிகிறது.

  இதை அப்பகுதியில் கோசாலை நடத்தும் சந்திரசேகர் பாபா அவர்களது வாகனத்தை சாலையில் மறித்து இறக்கியுள்ளார். அதற்குள் அங்கு கூட்டம் சேர்ந்த பொதுமக்களால் அந்த இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

  இதில், பொதுமக்கள் கும்பலிலிருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதால் ஆறு பேரில் மூத்தவரான ஷேர் கான் கொல்லப்பட்டுள்ளார். மற்ற ஐந்து பேரும் பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளனர். போலீசார் இவர்களை மக்களிடமிருந்து காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனாலும் இவர்கள் மீது பசுக்களை கடத்தியதாக வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

  Also Read: Covaxin: இந்தியாவில் இன்று முதல் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி சோதனை?

  இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

  ‘ஹரியாணாவின் மேவாத்திற்கு பசுக்களை கடத்த முயன்றதால் கோபம் அடைந்து தாக்குதல் நடத்திய பொதுமக்கள் மீது ஷேர் கான் கள்ளத்துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதில் பதிலுக்கு பொதுமக்களில் அடையாளம் தெரியாத ஒருவர் சுட்டதில் ஷேர் கான் அதே இடத்தில் பலியாகி விட்டார்’’ எனத் தெரிவித்தார்.

  இந்த சம்பவத்தில் ஷேர் கான், அவரது சகாக்களான அணீஸ், ரஹமான், ஷெஹசாத், காதீம் மற்றும் ஷேர் கானின் மகனான ஷாரூக் ஆகியோர் மீது சந்திர காந்த் பாபா புகார் அளித்துள்ளார்.

  இந்த ஆறு பேர் மீது பசு வதை தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான ஷாரூக், தன் தந்தை ஷேர் கானை கொலை செய்து விட்டதாக மூன்று பேர் மீது புகார் அளித்து வழக்குகள் பதிவாகி உள்ளது.

  இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
  Published by:Muthukumar
  First published: