Home /News /national /

'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம் வரும் 15ம் தேதி முதல் அமல்..!

'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம் வரும் 15ம் தேதி முதல் அமல்..!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திட்டம் மூலம் இந்தியாவின் எந்த நியாயவிலை கடையிலும் பொருட்களை வாங்கலாம்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை வரும் ஜனவரி 15ஆம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    பயனாளர்கள் தங்களுக்குரிய உணவுப்பொருட்களை இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு நியாயவிலை கடையிலும் ரேஷன் கார்டு மூலம் வாங்கி கொள்ளும் முறையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் அடையாளங்களை நியாயவிலை கடைகளில் உள்ள பி.ஓ.எஸ் கருவிகளுடன் இணைத்த பின்னர் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தபடும் என கூறப்படுகிறது.

    முதல்கட்டமாக ஆந்திரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வரும் ஜனவரி 15ம் தேதி அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

     

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Ration card

    அடுத்த செய்தி