Home /News /national /

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் 32 மாநிலங்களுக்கு விரிவாக்கம்!

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் 32 மாநிலங்களுக்கு விரிவாக்கம்!

மாதிரி படம்

மாதிரி படம்

ஒவ்வொரு முறையும் இந்த கார்டைப் பயன்படுத்தி எங்கு பொருள் வாங்கினாலும் அது மையமாக இருக்கும் ஒரு பொது தரவுத்தளத்தில் (data base) சேர்க்கப்படும்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
ஒரே நாடு , ஒரே ரேஷன் கார்டு திட்டம் தற்போது 32 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒரே நாடு , ஒரே ரேஷன் கார்டு திட்டமானது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நோக்கமாகக் கொண்ட செயல்படுத்தப்பட்டது. இதற்காக ரேஷன் அட்டைகள் ஸ்மார்ட் கார்டுளாக மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் இந்த கார்டைப் பயன்படுத்தி எங்கு பொருள் வாங்கினாலும் அது மையமாக இருக்கும் ஒரு பொது தரவுத்தளத்தில் (data base) சேர்க்கப்படும். அதன்படி ஒரு கார்டில் மாதம் ஒருமுறை மட்டுமே வாங்க முடியும். அதற்காக அனைத்து ரேஷன் கடைகளும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அனைத்து ரேஹ்ன் கடைகளிலும் கைரேகையைப் பதிவு செய்யும் கருவிகள் பொருத்தப்படும். இதில் உங்கள் கைரேகையைப் பதிவு செய்து நீங்கள்பொருட்களை வாங்கலாம்.

இந்த நிலையில் சுமார் 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கிடைக்கும் உணவு தானியங்களை பெற உதவுவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் “ஒரே நாடு , ஒரே ரேஷன் கார்டு திட்டம்" தற்போது 32 மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது

நான்கு மாநிலங்கள் தங்கள் நெட்வொர்க்குகளை டிஜிட்டல் மயமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில், டிஜிட்டல் முறை மூலம் 230 மில்லியன் பரிவர்த்தனைகள் நடந்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய உணவுச் செயலாளர் சுதன்ஷு பாண்டே, 67 சதவிகித மக்கள் அல்லது 800 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிடைக்கும் ஒரு மேரா ரேஷன் (Mera Ration app) மொபைல் ஆப்பையும் அரசாங்கம் வெளியிட்டதாக தெரிவித்துள்ளார்

இந்த மொபைல் ஆப் ரேஷன் கடையில் இருக்கும் நிகழ்நேர பொருட்களின் விவரங்களை காண்பிக்கும். இதன் மூலம் நியாயவிலைக் கடைகளில் இருந்து மலிவான உணவு பொருட்களை வாங்கி கொள்ளலாம் .

நகரங்களில் வேலை செய்வதற்காக தங்கள் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மலிவான உணவு தானியங்களை அணுகுவதை இந்த திட்டம் எளிதாக்கும் என்று கூறப்படுகிறது. இத்திட்டத்தை பெற விரும்புவார்கள் தனது ரேஷன் கார்டை ஆதார் அட்டையுடன் இணைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read... 32 மில்லியன் இந்தியர்களை மிடில் கிளாஸிலிருந்து வறுமை நிலைக்கு தள்ளியுள்ள கொரோனா!

உணவுச் செயலாளர் சுதன்ஷு பாண்டே அளித்த தகவலின் படி, மேற்கு வங்கம், டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் அசாம் மாநிலங்கில் இந்த திட்டம் இன்னும் செயல்படுத்தவில்லை. அசாமில் உள்ள பிரச்சினை என்னவென்றால், ஆதார் பயன்பாடு குறைவாக உள்ளது, அதேபோல டெல்லி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் டிஜிட்டல் உள்கட்டமைப்புடன் கிட்டத்தட்ட தயாராக உள்ளன என தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் தற்போது 32 மாநிலங்களில் தடையற்ற முறையில் செயல்பட்டு வருகிறது. ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி தனது சொந்த மாநிலத்தைத் தவிர வேறு ஒரு மாநிலத்தில் மானிய விலையில் உணவைப் பெறுவதன் மூலம், மாநிலங்களுக்கு இடையேயான உறவை வளர்ப்பது மட்டுமின்றி, புலம்பெயர்ந்தோர் எங்கு சென்றாலும் அவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Ration card

அடுத்த செய்தி