Home /News /national /

தேசியக் கொடியை அவமானப்படுத்தியதா அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம்? சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு

தேசியக் கொடியை அவமானப்படுத்தியதா அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம்? சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு

தேசியக் கொடி டிசைன்களில் பதிப்பது என்பது முட்டாள்தனமான கிரியேட்டிவிட்டி என்று கூறியுள்ள நெட்டிசன்கள், அமேசான் நிறுவனம் எப்போதும் இந்தியர்களின் உணர்வு, கலாச்சாரத்தை புண்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

    பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், இந்திய தேசியக் கொடியை அவமானப்படுத்தியதாகக் கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து, சமூக வலைதளங்களில் அதிக பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இந்தியாவின் மிகப்பெரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் இருந்து வருகிறது. இந்த நிறுவனம் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.

    அமேசான் நிறுவனத்தை பயன்படுத்தி கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாக சமீபத்தில் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதேபோன்று வெளிநாடுகளிலும் விதிகளை மீறியதால், பல்வேறு அமைப்புகளின் கண்டனத்திற்கும் அமேசான் நிறுவனம் ஆளாகியுள்ளது.

    இந்நிலையில் புதிய புகார் ஒன்றில் அமேசான் ஆன்லைன் மீது எழுந்துள்ளது. அதாவது தேசியக் கொடியை பயன்படுத்தி மாஸ்க், டி.ஷர்ட், கீ செயின்கள் உள்ளிட்டவற்றை அமேசான் விற்பனை செய்வதாகவும், குறிப்பாக ஷூக்களில் தேசியக் கொடி இடம்பெறுவது உள்ளிட்டவற்றால் தேசியக் கொடி அவமானப்படுத்தப்படுவதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    இதை மையப்படுத்தி ட்விட்டரில், #Amazon_Insults_National_Flag என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.

    இதன்கீழ் பதிவிட்டுள்ள ட்விட்டர் பயனாளர்கள், உடனடியாக இதுபோன்ற தேசியக் கொடி சார்ந்த பொருட்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    தேசியக் கொடியை டிசைன்களில் பதிப்பது என்பது முட்டாள்தனமான கிரியேட்டிவிட்டி என்று கூறியுள்ள நெட்டிசன்கள், அமேசான் நிறுவனம் எப்போதும் இந்தியர்களின் உணர்வு, கலாச்சாரத்தை புண்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சில ட்விட்டர் பயனாளர்கள், சட்டப்படி, வர்த்தக காரணங்களுக்காக மூவர்ணக் கொடி பயன்டுத்தக்கூடாது என்பதை சுட்டிக் காட்டி, அமேசான் நிறுவனத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். இந்த சர்ச்சை குறித்து அமேசான் நிறுவனம் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.
    Published by:Musthak
    First published:

    Tags: Amazon

    அடுத்த செய்தி