டெல்லி தேர்தல் அசுர வெற்றி: 24 மணி நேரத்தில் ஆம் ஆத்மியில் இணைந்த 11 லட்சம் பேர்

அரவிந்த் கெஜ்ரிவால்

 • Share this:
  டெல்லி தேர்தல் முடிவு வந்த ஒரு நாளில் நாடு முழுவதிலுமிருந்து 11 லட்சம் பேர் கட்சியில் இணைந்துள்ளனர் என்று ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

  டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. வரும் 16-ம் தேதி டெல்லி முதல்வராக மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ளார்.

  ஆம் ஆத்மியை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. மேலும், 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. ஆம் ஆத்மியின் அசுர வெற்றி தேசிய அளவில் அக்கட்சிக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மிகப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.


  இந்தநிலையில், டெல்லி தேர்தல் முடிவுகள் வெளிவந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஆம் ஆத்மியில் 11 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

  Also see:


   
  Published by:Karthick S
  First published: