ஒரே மரத்தில் 121 வகையான கனிகள்: ஆச்சரியமூட்டும் மாமரம்!

ஒரே மரத்தில் 121 வகை மாம்பழம்

15 வயதான இந்த மாரத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 121 வகை மாம்பழ மரத்தின் கிளைகளை தோட்டக்கலை அதிகாரிகள் நட்டுள்ளனர்.  இந்த முயற்சி பலன் அளிக்க தொடங்கியதையடுத்து ஒரே மாரத்தில் 121 வகையான மாம்பழங்கள் வளர்ந்து வருகிறது

  • Share this:
உத்திரபிரதேசத்தில் ஒரே மாமரத்தில் 121 வகையான கனிகள் வளர்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாம்பழ சீசன் களைகட்டியுள்ள நிலையில் பங்கனப்பள்ளி, ருமானி, அல்போன்சா என பல வகையான மாம்பழங்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.  மாம்பழங்களின் ருசிக்கு மயங்காதவர்களே கிடையாது என கூறும் அளவுக்கு அவற்றின் ருசி நம்மை சொக்க வைக்கும். அப்பிடி இருக்கும்போது ஒரே மாரத்தில் 121 வகை மாம்பழங்கள் கிடைத்தால் என்ன செய்வோம்?

ஆம், உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள மரம் ஒன்றில் 121 வகையான மாம்பழங்கள் வளர்கிறது.  சஹரன்பூர் மாவட்டம் ஏற்கனவே மாம்பழ விளைச்சலுக்கு பெயர்பெற்ற மாவட்டமாகும்.  மாம்பழக உற்பத்தியில் புதுமையை புகுத்த அங்குள்ள தோட்டக்கலை அதிகாரிகள் திட்டமிட்டனர்.  அதன்படி, அவர்களின் முயற்சியில் நிகழ்ந்த அதிசயமே இந்த மாமரம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

15 வயதான இந்த மாரத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 121 வகை மாம்பழ மரத்தின் கிளைகளை தோட்டக்கலை அதிகாரிகள் நட்டுள்ளனர்.  இந்த முயற்சி பலன் அளிக்க தொடங்கியதையடுத்து ஒரே மாரத்தில் 121 வகையான மாம்பழங்கள் வளர்ந்து வருகிறது.

இந்த மரத்தின் வயது 10 ஆக இருக்கும்போதே அதனை தேர்வு செய்ததாக கூறும் சஹரன்பூர் மாவட்ட தோட்டக்கலை மற்றும் பயிற்சி மைய இணை இயக்குநர் ராம்,  இந்த மரத்தை கவனித்துக் கொள்ள தனி ஊழியர் நியமிக்கப்பட்டதாகவும், தற்போது மரத்தின் ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு வகை மாம்பழம் வளருவதாக கூறுகிறார்.

இந்தியாவின் மாம்பழ மனிதர் என்று அழைக்கப்படும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த  ஹாஜி கலிமுல்லா கான் ஒரே மரத்தில்300 வகையான மாம்பழங்களை வளர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2008ம் ஆண்டு அவருக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
Published by:Murugesh M
First published: