பீகாரில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விற்பனை...!

  • News18
  • Last Updated :
  • Share this:
பீகார் மாநிலத்தில் ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர்.

குறைவான விலையில் வெங்காயம் விற்கப்படுவதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பிஸ்கோமான் பவன் பகுதியில் அம்மாநில கூட்டுறவு சங்கத்தின் மூலம் திறந்த வாகனத்தில் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விலை குறைவாக இருப்பதால் வெங்காயத்தை வாங்க கூட்டம் அலைமோதுகிறது. பீகாரில் வெங்காய விற்பனை வாகனத்தின் மீது சில நாட்களுக்கு முன்பு கல்வீச்சு சம்பவம் நடந்ததால், பாதுகாப்பு கருதி விற்பனையாளர்கள் ஹெல்மெட் அணிந்து விற்பனை செய்து வருகின்றனர்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published: