போதைக்கு முன் பவ்யம்.. போதைக்கு பின் வீச்சரிவாள்.. புதுச்சேரியில் நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியானது..

Youtube Video

புதுச்சேரியில் மதுகடை பாரில் மதுகுடித்தவர்களிடம் குடித்த மதுவிற்கான தொகை கேட்டதற்கு கத்தியை காட்டி மிரட்டி தாக்கி சென்றுள்ளது ஒரு கும்பல். சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் தப்பிய கும்பல் சிக்குமா?

 • Share this:
  புதுச்சேரி நகரப்பகுதியில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் எதிரே, சுப்ராயன் வீதியில் தனியார் உயர்ரக மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த விடுதிக்கு கடந்த ஞாயிற்று கிழமை மாலை மூன்று நபர்கள் மதுபானம் அருந்த வந்துள்ளனர். பார் ஊழியரிடம் கணக்கு பார்த்து முடிவில் பணம் கொடுப்பதாக கூறி மது வாங்கி குடித்துள்ளனர் அந்த கும்பல். போதை ஏறும் வரை பவ்யமாக மது குடித்த கும்பல் போதை சிறிது தலைக்கு ஏறியதும் தங்கள் உண்மை முகத்தை காட்ட தொடங்கியுள்ளது.

  பாரில் கத்தி சத்தபோட்டு பாட்டுப்பாட தொடங்கிய கும்பலிடம் குடித்த மதுவிற்கு பணம் கேட்டுள்ளனர் ஊழியர்கள். ஆனால் நாங்கள் யார் தெரியுமா எங்களிடமே பணம் கேட்கிறாயா என்று ஊழியர்களை மிரட்ட தொடங்கியுள்ளது அந்த கும்பல். இதனார் போதை கும்பலுக்கம் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

  ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கும்பல் கடையில் இருந்து வெளியேறி வாகனத்தில் பதுக்கி வைத்திருந்த வீச்சரிவாள், கத்தியை எடுத்து கடை ஊழியர் முருகனை கொலை வெறியுடன் தலை மற்றும் கழுத்தில் கடுமையாக தாக்கியுள்ளது.

  ஊழியர்களை தாக்கிய கும்பல் கடைவாசலில் கத்தி ,அரிவாளுடன் கூச்சலிட்டு உடனே அங்கிருந்து தப்பி சென்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒதியஞ்சாலை போலீசார் காயமடைந்த முருகனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிக்கிச்சைக்காக சேர்த்தனர். மேலும் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைபற்றிய போலீசார் அதை கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.

  மேலும் படிக்க...அரசு ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் போலியான சான்றிதழ்… இளைஞர் சிக்கியது எப்படி?

  கடை ஊழியர்களை மிரட்டியவர்கள் பாண்டிச்சேரி திருவள்ளுவர் நகரை சேர்ந்த பிரபல ரவுடிகளான சத்தியா மற்றும் வீக்கி மற்றும் அவர்களது கூட்டாளிகள் என்று தெரியவந்தது. இதனை அடுத்து தப்பி சென்ற மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

  குடித்த மதுவிற்கு பணம் கேட்ட கடை ஊழியரை போதை கும்பல் கொலை வெறியுடன் தாக்கய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: