ஒசூர் அருகே யானை மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து...

சாலைகளில் திரியும் யானை

ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஒற்றையானை மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து, 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சைக்காக அய்யூர் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது

 • Share this:
  கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் ஜவளகிரி வழியாக தேன்கனிக்கோட்டைக்கு வந்தது. இதில் 70வது க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சானமாவு வனப்பகுதிக்கு வந்தது. இந்த நிலையில் சானமாவு வனப்பகுதியில் இருந்த காட்டு யானைகள் கூட்டத்தில் ஒற்றை யானை பிரிந்து கோப சந்திரம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்தது. இந்த யானை சில நாட்களுக்கு முன் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்று மீண்டும் கோபசந்திரம் வனப்பகுதிக்கு திரும்பியது.

  இந்த நிலையில் இந்த ஆண் காட்டு யானை மீண்டும் நேற்று இரவு 9 மணி அளவில் கிருஷ்ணகிரி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஒற்றை யானை மீது கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் யானையின் கால் முறிந்து தேசிய நெடுஞ்சாலையில் நடுவே மயங்கி விழுந்தது.

  அடிப்பட்ட யானை


  படுகாயம் அடைந்தத யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறை மருத்துவர் பிரகாஷ் ராஜசேகர் தலைமையிலான மருத்துவர் குழு விரைந்து வந்தது. கிருஷ்ணகிரி வன அலுவலர் அறிவுறுத்தலின்படி மருத்துவ குழுவினர் காயமுற்ற யானையை டாக்டர்கள் குழு பரிசோதித்தனர். டாக்டர் பிரகாஷ் ,ராஜ் குமார், மருத்துவ குழுவின் வழிகாட்டுதலின்படி முன்னதாக யானை மீது தீயணைப்புதுறை உதவியுடன் நீர் பீச்சி அடிக்கப்பட்டு பிறகு யானைக்கு 8 மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

  மேலும் படிக்க...Corona Vaccine: கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

  பின்பு ஊழியர்களின் உதவியுடன் வண்டியில் ஏற்றப்பட்ட ஆண் யானை சிகிச்சை அளிப்பதற்காக தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர் வனப்பகுதியில் கொண்டு செல்லப்பட்டு மருத்துவ குழு கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் ஊழியர்கள் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிருஷ்ணகிரி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: