• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பல தலைமுறைகளாக ஒரே குடும்பம் நிர்வகிக்கும் கட்சி: காங்கிரசை சாடும் பிரதமர் மோடி

பல தலைமுறைகளாக ஒரே குடும்பம் நிர்வகிக்கும் கட்சி: காங்கிரசை சாடும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

வாரிசு அரசியல் மக்களாட்சிக்கு ஆபத்தானது என்று கூறி, காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.

  • Share this:
    71-வது இந்திய அரசியலமைப்பு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

    மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் அரசியலமைப்பு தின கொண்டாட்டத்தை புறக்கணித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியே மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இந்நிலையில் அரசியலமைப்பு தினத்தையொட்டி நாடாளுமன்றத்தில் பிரதமர் பிரதமர் மோடி பேசியதாவது-

    நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசியலமைப்பு தின வாழ்த்துக்கள். பல வேறுபாடுகள் நிறைந்த நம் நாட்டை நமது அரசியலமைப்பு சட்டம் ஒன்றிணைக்கிறது. பல தடைகளைத் தாண்டி, உருவாக்கப்பட்ட இந்த சட்டம் மாநிலங்களை ஒருங்கிணைத்துள்ளது.

    நாட்டின் மீது பற்று கொண்ட தலைவர்கள், தங்களது கூர் மதியால் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி அளித்துள்ளனர். அவர்களுக்கு இந்த நாடாளுமன்றம் நன்றி தெரிவிக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைய தீவிரமாக போராடிய மகாத்மா காந்திக்கும் இந்த நாடாளுமன்றம் நன்றி கூறிக் கொள்கிறது.

    குடும்பத்திற்காக ஒரு கட்சி (காங்கிரஸ் ) செயல்படுகிறது; ஒரே குடும்பம் கட்சியை நிர்வகிக்கிறது. பல தலைமுறைகளாக அந்தக் கட்சியை ஒரேயொரு குடும்பம்தான் நடத்தி வருகிறது. இது மக்களாட்சிக்கு ஆபத்தானது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார் இந்திய அரசியலமைப்பு சட்டம் 1949ம் ஆண்டு நவம்பர் 26-ம்தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த நாளை அரசியலமைப்பு நாளாக கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இந்தியா கொண்டாடி வருகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அன்றைக்கு கூறியிருந்தார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Musthak
    First published: