‘தெலங்கானா முதல்வராவேன்’ - கட்சி தொடங்கும் முன்பே ஜெகன் தங்கை உறுதி!

‘தெலங்கானா முதல்வராவேன்’ - கட்சி தொடங்கும் முன்பே ஜெகன் தங்கை உறுதி!

ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா

தெலுங்கானாவில் வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு வேலை தர வேண்டும் என வலியுறுத்தி ஐதராபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா வலுகட்டயாமாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்.

 • Share this:
  ஆந்திர முதல்வரின் தங்கையான ஷர்மிளா வரும் ஜூலை 8ம் தேதி தெலுங்கானாவில் புதிதாக கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அரசியலில் புதிதாக அடியெடுத்து வைக்க உள்ள அவர், தெலுங்கானாவில் வேலையில்லாத 1.91 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை தர வேண்டும் என்று வலியுறுத்தி ஐதராபாத்தில் உள்ள இந்திரா பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் ஷர்மிளாவின் தாயாரும், மாநிலம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்களும் கலந்துகொண்டுனர்.

  இதனிடையே, இந்திரா பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஷர்மிளாவை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி, அவரது ஆதரவாளர்கள் பலரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் தெலங்கானா அரசியலில் முக்கிய பிரச்சினையாக மாறி பெரும் சர்ச்சையானது.

  இதனிடையே, ஐதராபத்தின் வேறு பகுதியில் உள்ள லோட்டஸ் பூங்காவில் ஷர்மிளா உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கைது செய்யப்பட்டுள்ள தனது ஆதரவாளர்களை வெளியே விடும் வரை இந்த உண்ணாவிரதம் தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், ’ஒரு நாள் தான் தெலங்கானா முதல்வராவேன்’ என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

  ஷர்மிளாவின் இந்த அரசியல் நகர்வில் ஜெகன் மோகன் எந்த தலையிடலும் மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து, ஷர்மிளா தனது கட்சியின் சின்னம், கொடி மற்றும் கொள்கை போன்றவைகளை ஜூலை 8ம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் 2023ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: