’நாட்டுக்கே மோடி என பெயரை வைப்பார்கள்’ - தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமரின் படங்கள் இருப்பதை எதிர்த்து மம்தா பேச்சு..

’நாட்டுக்கே மோடி என பெயரை வைப்பார்கள்’ - தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமரின் படங்கள் இருப்பதை எதிர்த்து மம்தா பேச்சு..

மம்தா பானர்ஜி

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில், நாள்தோறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.

 • Share this:
  நாட்டுக்கே மோடியின் பெயர் வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

  கொல்கத்தாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் நடக்கும் காலங்களில் மட்டுமே மேற்கு வங்கத்திற்கு வரும் பா.ஜ.க தலைவர்கள், பொய்களையும், வதந்திகளையும் பரப்புவதாக குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதாகவும், ஆனால் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில், நாள்தோறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.

  கொரோனா பெருந்தொற்று தடுப்புக்கான சான்றிதழில் பிரதமர் படங்கள் இடம்பெற்றதையும், கிரிக்கெட் மைதானத்திறகு பிரதமர் பெயர் சூட்டப்பட்டதையும் குறிப்பிட்ட மம்தா பானர்ஜி, இந்தியாவுக்கு பிரமதர் மோடியின் பெயர் சூட்டப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என விமர்சித்துள்ளார்.
  Published by:Gunavathy
  First published: