ஒரு கோடியே 60 லட்சம் குடும்பங்களுக்கு மாதம்தோறும் 500 ரூபாய் வழங்கப்படும் : திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு

ஒரு கோடியே 60 லட்சம் குடும்பங்களுக்கு மாதம்தோறும் 500 ரூபாய் வழங்கப்படும் : திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு

மமதா பானர்ஜி

ஆண்டுக்கு 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி...

 • Share this:
  மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் 500 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

  மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மம்தா பானர்ஜி வெளியிட்டார்.

  அதில், அனைத்து குடும்பங்களுக்கும் குறைந்தபட்ச வருவாய் திட்டத்தின் மூலம், பொதுப்பிரிவை சேர்ந்த ஒரு கோடியே 60 லட்ச குடும்பத்துக்கு மாதம்தோறும் 500 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பட்டியல் இன குடும்பங்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், இத்தொகை குடும்பத் தலைவிகளின் பெயரில் வரவு வைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  5 ஆண்டுகளில் 10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உருவாக்கப்படும் எனவும், இரண்டாயிரம் பெரிய தொழிற்சாலைகள் நிறுவப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

  ஆண்டுக்கு 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

  Must Read : 3 கோடி ரேஷன் கார்டுகளை மத்திய அரசு ரத்து செய்ததால் பட்டினிச் சாவுகள்; இது மிகவும் சீரியஸான விவகாரம்- உச்ச நீதிமன்றம்

   

  மேலும், மாணவர்களின் உயர் கல்விக்கு உதவும் வகையில் 10 லட்ச ரூபாய் மதிப்பில் கிரெடிட் கார்டு வழங்கப்படும் எனவும், 4 சதவீதம் வட்டியே வசூலிக்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published:

  சிறந்த கதைகள்