Home /News /national /

'தேர்தலில் தோல்வி அடையும் கலையை காங்கிரசிடம் கற்றுக் கொள்ளலாம்' : பாஜக அமைச்சர் அனுராக் தாகூர்

'தேர்தலில் தோல்வி அடையும் கலையை காங்கிரசிடம் கற்றுக் கொள்ளலாம்' : பாஜக அமைச்சர் அனுராக் தாகூர்

கடந்த 30 ஆண்டுகளாக ராகுல் காந்தி குடும்பத்தை சேர்ந்த எவரும் தலைவராகவில்லை, மத்திய அமைச்சர் ஆகவில்லை.

கடந்த 30 ஆண்டுகளாக ராகுல் காந்தி குடும்பத்தை சேர்ந்த எவரும் தலைவராகவில்லை, மத்திய அமைச்சர் ஆகவில்லை.

கடந்த 30 ஆண்டுகளாக ராகுல் காந்தி குடும்பத்தை சேர்ந்த எவரும் தலைவராகவில்லை, மத்திய அமைச்சர் ஆகவில்லை.

    தேர்தலில் தோல்வி அடையும் கலையை காங்கிரசிடம் கற்றுக் கொள்ளலாம் என்று பாஜக அமைச்சர் அனுராக் தாகூர் விமர்சித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைமை குறித்து கருத்து தெரிவித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், 'ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும். கடந்த 30 ஆண்டுகளாக ராகுல் காந்தி குடும்பத்தை சேர்ந்த எவரும் தலைவராகவில்லை, மத்திய அமைச்சர் ஆகவில்லை. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமைக்கு அவர்கள் எந்த அளவு உழைத்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்' என்று கூறியிருந்தார்.

    அசோக் கெலாட்டின் கருத்து குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, 'தேர்தலில் தோல்வி பெறும் கலையை நாம் காங்கிரசிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்' என்று பதில் அளித்தார்.

    இதையும் படிங்க - விமான நிலைய வளாகத்திற்குள் சிறிய வாளை வைத்துக்கொள்ள சீக்கிய ஊழியர்களுக்கு மீண்டும் அனுமதி

    உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களில் பா.ஜ.க பெறும் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.

    ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. பிரதான எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தரத் தலைவர் இல்லாமல் இருப்பதே இந்தத் தோல்விக்கு காரணம் என்று அரசியல் வல்லுநர்கள் விமர்சனம் செய்துவந்தனர்.

    இதையும் படிங்க - பிரதமர் மோடி அபாரமான திறமைசாலி - காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பாராட்டு

    இந்தநிலையில், சோனியா காந்தி தலைமையில் மூத்த தலைவர்கள் பங்கேற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Election 2022

    அடுத்த செய்தி