• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • உ.பியில் நெருங்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மத்தியில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்த 7 எம்எல்ஏக்கள்!

உ.பியில் நெருங்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மத்தியில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்த 7 எம்எல்ஏக்கள்!

உ.பியில் நெருங்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மத்தியில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்த 7 எம்எல்ஏக்கள்!

உ.பியில் நெருங்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மத்தியில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்த 7 எம்எல்ஏக்கள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 எம்எல்ஏ-க்களும், பாஜகவைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏ-வும் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர்.

  • Share this:
    உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், பாஜக-வைச் சேர்ந்த சித்தாபூர் தொகுதி எம்எல்ஏ ராகேஷ் ரத்தோரும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 6 பேரும், சமாஜ்வாதி கட்சியில் அதன் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் இணைந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய அகிலேஷ் யாதவ், பாஜக-வும், காங்கிரஸும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும், வரும் நாட்களில் பாஜக காணாமல்போய்விடும் என்றும் அவர் கூறினார். பாஜக-வைச் சேர்ந்த மேலும் பலர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக கூறிய அகிலேஷ் யாதவ், குறிப்பிட்ட கொள்கைகளைக் கொண்ட நபர்களையே பணியில் அமர்த்தி கல்வி நிறுவனங்களை பாஜக சீர்குலைத்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

    பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 6 பேரும், கடந்த ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்ததைத் தொடர்ந்து, கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் அனைவரும் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர்.

    இதனிடையே, பீகாரில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலை குறிப்பிட்டுப் பேசிய ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத், தேர்தலில் தோல்வியடைவதற்காகவும், டெபாசிட்களை இழப்பதற்காகவும் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியுடன் தான் தொலைபேசியில் பேசியதாக லாலு பிரசாத் கூறினார். தேசிய அரசியலில் பாஜக-வுக்கு மாற்றாக காங்கிரஸ் கட்சியே இருப்பதாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் காங்கிரஸை தாங்கள் ஆதரிக்க உள்ளதாகவும் லாலு பிரசாத் தெரிவித்தார்.

    லாலு பிரசாத்தின் இந்த செயல்பாடுகள், உத்தரப்பிரதேச தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இஸ்லாமியர்களை தங்களது கட்சியில் அதிக அளவில் சேர்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. வாக்குச்சாவடி அளவிலும், மண்டல அளவிலும் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: