Home /News /national /

ஓணம் பண்டிகையில் உச்சம் தொட்ட மது விற்பனை.. ஒரே நாளில் ரூ.117 கோடி வசூல்

ஓணம் பண்டிகையில் உச்சம் தொட்ட மது விற்பனை.. ஒரே நாளில் ரூ.117 கோடி வசூல்

ஓணம் மதுபான விற்பனை உச்சம் தொட்டது

ஓணம் மதுபான விற்பனை உச்சம் தொட்டது

கடந்தாண்டு ஒரே நாளில் ரூ.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்ற நிலையில், இந்தாண்டு அதை விட ரூ.32 கோடி கூடுதலாக மது விற்பனையாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India
    கேரள மக்களின் மிக முக்கியம் வாய்ந்த பண்டிகையான ஓணம் கடந்த 8ஆம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கேரளாவின் பாரம்பரியத் திருவிழாவான ஓணத்தை கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் அம்மாநில மக்கள் கொண்டாடினர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் முடக்கம் கண்டன. எனவே, இந்தாண்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் முழு உற்சாகத்துடன் ஓணம் கொண்டாடப்பட்டது.

    இந்த உற்சாகமானது மதுபான விற்பனையிலும் எதிரொலித்துள்ளது. பொதுவாக பண்டிகை விடுமுறை நாள்களில் மதுபான விற்பனை வசூல் களைக்கட்டுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாள் மது விற்பனை ஆண்டுதோறும் உச்சம் தொட்டு வருகிறது. அதேபோல், கேரளாவிலும் இந்தாண்டு ஓணம் பண்டிகையின் மது விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    ஓணம் பண்டிகை 8ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், அதன் முதல் நாளான 7ஆம் தேதி மட்டும் ஒரே நாளில் ரூ.117 கோடி மது விற்பனை நடைபெற்றது. இது புதிய சாதனையாக கருதப்படுகிறது. குறிப்பாக கடந்தாண்டு ரூ.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்ற நிலையில், இந்தாண்டு அதை விட ரூ.32 கோடி கூடுதலாக மது விற்பனையாகியுள்ளது.

    இதையும் படிங்க: கேம் செயலி மூலம் கோடிக்கணக்கில் மோசடி.. மலைப்போல் குவிந்த ரூபாய் நோட்டுகள் - தொழிலதிபர் வீட்டில் ரூ.18 கோடி பறிமுதல்

    கடந்தாண்டு, ஓணம் பண்டிகையை ஒட்டிய வாரத்தில் ரூ.529 கோடிக்கு மது விற்பனையானது. இந்தாண்டு அதை விட ரூ.95 கோடி கூடுதலாக வர மது விற்பனை ஆகி, ரூ.624 கோடிக்கு விற்பனை ஆனது.கேரள மாநில மதுபான விற்பனை கழகமான பெப்கோ நிர்வாகம் கீழ் இயங்கி வரும் சில்லறை விற்பனை கடைகளில் ரூ.115 கோடிக்கு வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Kerala, Onam

    அடுத்த செய்தி