கனமழை வெள்ளத்தால் களையிழந்த ஓணம் கொண்டாட்டங்கள்

கனமழை வெள்ளத்தால் களையிழந்த ஓணம் கொண்டாட்டங்கள்
களையிழந்த ஓணம் கொண்டாட்டம்
  • News18
  • Last Updated: August 25, 2018, 6:03 PM IST
  • Share this:
கனமழை மற்றும் வெள்ளத்தால், கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ள கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை களையிழந்துள்ளது.

கேரளாவை ஆண்ட மகாபலி மன்னன் ஆண்டுக்கு ஒரு நாள் திரும்பி வருவதாக நினைத்து ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மன்னனை வரவேற்கும் வகையில், ஒவ்வொரு வீடுகளிலும் அத்தப்பூ கோலமிட்டு அலங்கரிக்கப்படும். இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. ஆனால், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால், கேரள மாநிலம் உருக்குலைந்து போயுள்ளதால், ஓணம் கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன.

பெரும்பாலான மக்கள், தங்களது உடமைகளை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் முதலமைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிசெய்து, இந்த ஓணத்தைக் கொண்டாடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதேபோல, ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த ஓணம் திருநாளில், கருத்து வேறுபாடுகளை மறந்து, அனைவரும் ஒன்றாக இணைந்து, கேரளாவை மறுகட்டமைப்பு செய்ய உறுதியேற்போம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
First published: August 25, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading