ரூ.311 கோடி போனஸ்... அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

சட்டசபை தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் ஏப்ரல் மாதத்தில் ஊதிய திருத்தத்தை செயல்படுத்த அரசு ரூ.4850 கோடியை ஒதுக்கியது.

 • Share this:
  சட்டசபை தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் ஏப்ரல் மாதத்தில் ஊதிய திருத்தத்தை செயல்படுத்த அரசு ரூ.4850 கோடியை ஒதுக்கியது.

  கொரோனா ஊரடங்கால் மக்களின் பொருளதார நிலை முடங்கி உள்ள நிலையில் கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரூ.311 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். நான்கு மாதங்களுக்கு முன்பு தான் 5.2 லட்சம் அரசு ஊழியர்களின் ஊதிய திருத்தத்தை செயல்படுத்த ரூ.4850 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

  மேலும் 5.2 லட்சம் அரசு ஊழியர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் ஓணம் போனஸாக ரூ.4000 பெறுகிறார்கள். மீதமுள்ள அரசு ஊழியர்களுக்கு தலா ரூ.2750 பண்டிகை கால போனாஸாக கொடுக்கப்பட உள்ளது. கூடுதலாக 5.3 லட்சம் ஓய்வூதியதாரார்களுக்கு தலா ரூ.1000 பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read : காதலை ஏற்க மறுக்கும் பெண்களுக்கு ‘லவ் டார்ச்சர்’- போலீஸ் வேடிக்கைப் பார்க்காது: பினராயி விஜயன் எச்சரிக்கை

  கேரளாவில் கடந்த 7 வாரங்களில் வேலை இழப்பு மற்றும் மற்றும் கடன் சுமை காரணமாக மாநிலம் முழுவதும் 28 தற்கொலைகள் நடந்து உள்ளன. தனியார் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் வணிகர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஆனால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் சம்பள உயர்வு மற்றும் போனஸ் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளதால் பினராய் விஜயன் அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: