Home /News /national /

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாம்பு படகு போட்டி.. கேரளாவில் கோலாகலம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாம்பு படகு போட்டி.. கேரளாவில் கோலாகலம்

 பாம்பு படகு போட்டி

பாம்பு படகு போட்டி

Nehru Trophy boat race : 68-வது நேரு கோப்பைகான இந்த படகு போட்டி புன்னமடக்காயல் என்ற ஏரியில் நடத்தப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு புகழ்பெற்ற 68வது நேரு கோப்பைகான பாம்பு படகு போட்டி நிகழ்ச்சி ஆலப்புழாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை தொடர்ந்து 10 நாட்கள் நீண்ட பண்டிகையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாட்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதில் முக்கியமான ஒன்று ஆலப்புழாவில் நடைபெறும் நேரு கோப்பைக்கான படகு போட்டி நிகழ்ச்சி. கடந்த 2 ஆண்டுகளாக கோவிட் பரவலால் நடைபெறாமல் இருந்த இந்த படகு போட்டியை இன்று முதல்வர் பினராய் விஜயன் தொடங்கி வைக்கிறார்.

68-வது நேரு கோப்பைகான இந்த படகு போட்டி புன்னமடக்காயல் என்ற ஏரியில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறு படகுகள், 20 சுண்டன் படகுகள் (பாம்பு படகு)  உட்பட 77 படகுகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. 11 மணி முதல் - முதலில் சிறு சிறு படகுகள் போட்டியிடுகின்றன. மதியம் 2 மணிக்கு மேல் பாம்பு படகுகளின் போட்டியில் தொடங்கியது.

இந்தப் போட்டியில் கேரளா போலீசாரின் அணியும் கலந்து கொள்வது என்பதும் குறிப்பிடத்தக்கது. 40 லட்சம் ரூபாய்க்கு மேலாக படகு போட்டி டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுள்ளதாக ஆலப்புழா கலெக்டர் தெரிவித்துள்ளார். வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்களும் வந்துள்ளதால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ALSO READ | தொடர் மழையால் உயர்ந்தது மல்லிகை பூ விலை... எவ்வளவு தெரியுமா?
 சிறு படகுகளின் போட்டியின் போது 20 பேர் கொண்ட குழு  ஒன்று பங்கேற்ற படகு திடீரென நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. படகை பிடித்து தொங்கிக் கொண்டிருந்த 20 பேரையும் பாதுகாப்பு பணிக்காக அங்கிருந்த தீயணைப்பு துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Kerala

அடுத்த செய்தி