முகப்பு /செய்தி /இந்தியா / பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்க திட்டம் - மத்தியப் பிரதேச முதலமைச்சர் அறிவிப்பு

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்க திட்டம் - மத்தியப் பிரதேச முதலமைச்சர் அறிவிப்பு

மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான்

மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான்

வருமான வரி கட்டாத பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சௌஹான் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madhya Pradesh, India

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கவுள்ளதாக முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார்.

நேற்று புத்னி மாவட்டத்தில் நடைபெற்ற நர்மதா ஜெயந்தி விழாவில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பெண்கள் முன்னேற்றத்திற்காக மத்திய பிரதேச அரசு லத்லி லட்சுமி யோஜ்னா போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நான் புதிய திட்டம் ஒன்றை அறிவிக்கிறேன். நமது சகோதரிகளை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதே அரசின் நோக்கம்.

எனவே, வருமான வரி கட்டாத ஏழை, நடுத்தர குடும்ப பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் 'லத்லி பெஹ்னா'என்ற திட்டத்தை தொடங்கவுள்ளேன். இதன் மூலம் சாதி, மதம், இனம் கடந்து அனைத்து அனைத்து பெண்களும் பயனடைவார்கள். இந்த உதவித்தொகை பெண்களின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்.

இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.60,000 கோடி ஒதுக்க திட்டமிட்டுள்ளேன். பெண்கள் பலமானவர்களாக இருந்தால் தான் குடும்பம் பலமாக இருக்கும். குடும்பம் பலமாக இருந்தால் தான் சமூகம் பலமாக இருக்கும், சமூகம் பலமாக இருந்தால் தான் மாநிலம் பலமாக இருக்கும். எனவே, பெண்களை இந்த திட்டம் பொருளாதார ரீதியாக பலப்படுத்தும் என்றுள்ளார்.

இதையும் படிங்க: “ பெண்கள் 30 வயதிற்குள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.. அசாம் முதலமைச்சர் பேச்சால் சர்ச்சை..!

ஏற்கனவே, குடும்ப பெண்களுக்கு மாதந்திர உதவித்தொகை திட்டம் புதுச்சேரியில் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டிலும் இந்த திட்டம் பரிசீலனையில் உள்ள நிலையில், இமாச்சல் அரசும் இதே வாக்குறுதியை தந்துள்ளது. கர்நாடகாவிலும் தேர்தல் நெருங்கும் நிலையில் இத்தகைய வாக்குறுதியை எதிர்கட்சியான காங்கிரஸ் வழங்கியுள்ளது. அதன் வரிசையில் தற்போது மத்திய பிரதேச முதலமைச்சரும் குடும்ப பெண்களுக்கு மாத உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளார்.

First published:

Tags: Madhya pradesh, Shivraj Singh Chouhan, Women