மசூத் அசார் விவகாரத்தில் புல்வாமா தாக்குதல் குறித்து குறிப்பிடாதது ஏன்? மத்திய அரசு விளக்கம்

ஒரு சம்பவத்தை வைத்து மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படவில்லை. பல்வேறு சம்பவங்களை அடிப்படையாக வைத்து அவர், தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மசூத் அசார் விவகாரத்தில் புல்வாமா தாக்குதல் குறித்து குறிப்பிடாதது ஏன்? மத்திய அரசு விளக்கம்
ரவிஷ் குமார்
  • News18
  • Last Updated: May 2, 2019, 9:36 PM IST
  • Share this:
மசூத் ஆசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்ததில் புல்வாமா தீவிரவாத தாக்குதலும் முக்கிய காரணம் என்று வெளியறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற மும்பை குண்டு வெடிப்புத் தாக்குதல், நாடாளுமன்றத் தாக்குதல், புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா அமைப்பு நேற்று அறிவித்தது. இந்தியாவின் நீண்ட நாள் கோரிக்கை நேற்று நிறைவேறியுள்ளது. இருப்பினும், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டதற்கான காரணத்தில் புல்வாமா தாக்குதல் குறித்து குறிப்பிடாதது ஏன் என்ற கேள்வி எழுந்துவந்தன.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவிஷ் குமார், ‘ஒரு சம்பவத்தை வைத்து மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படவில்லை. பல்வேறு சம்பவங்களை அடிப்படையாக வைத்து அவர், தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


நம்முடைய நோக்கம் அவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதுதான். நாட்டின் பாதுகாப்பு தொடர்பாகவும், தீவிரவாதம் தொடர்பாகவும் எந்த நாட்டுடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கவில்லை. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்ததற்கான காரணத்தில் புல்வாமா தாக்குதல் குறித்து ஏன் குறிப்பிடவில்லை என்பது குறித்து சீனா ஏற்கெனவே விளக்கமளித்துள்ளது.

பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மசூத் அசாருக்கான பணத்தை நிறுத்த வேண்டும், பயணம் செய்வதற்கு தடை விதிக்கவேண்டும், ஆயுதங்கள் வழங்கப்படுவதைத் தடை செய்யவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: May 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading