Home /News /national /

காங்கிரஸ் கட்சியில் சேர கூறிய நண்பர்.. அமைச்சர் நிதின் கட்கரி கூறிய பதில் என்ன தெரியுமா

காங்கிரஸ் கட்சியில் சேர கூறிய நண்பர்.. அமைச்சர் நிதின் கட்கரி கூறிய பதில் என்ன தெரியுமா

காங்கிரஸ் கட்சியில் சேர்வது குறித்து நிதின் கட்கரி கருத்து

காங்கிரஸ் கட்சியில் சேர்வது குறித்து நிதின் கட்கரி கருத்து

ஒரு காலத்தில் கட்சியின் தேசிய தலைவராக இருந்த நிதின் கட்கரி தற்போது கட்சியின் அதிகாரம் மிக்க குழுவான கட்சி நாடாளுமன்ற குழுவில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India
    காங்கிரஸ் கட்சியில் சேர தனது நண்பர் கூறியபோது, கிணற்றில் குதிக்கக் கூட தயார், ஆனால் காங்கிரஸ் கட்சியில் இணைய மாட்டேன் என தெரிவித்ததாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்றார்.இந்த நிகழ்வில் பேசிய போது அவரிடம் காங்கிரஸ் கட்சி குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர், "நான் இளம் வயதில் கட்சியின் மாணவர் அமைப்பு தலைவராக இருந்தேன். அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எனது நண்பர், என்னை கட்சி மாற வேண்டும் என்றார். அவர் , ‘என்னிடம் நல்ல மனிதர் ஆனால் தப்பான கட்சியில் இருக்கிறேன்’ என கூறினார்.

    நல்ல எதிர்காலத்திற்கு நீ காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என வற்புறுத்தினார். அதற்கு நான் அவரிடம், நான் கிணற்றில் குதித்து சாவேனே தவிர ஒரு போதும் காங்கிரஸ் கட்சியில் சேர மாட்டேன். எனக்கு காங்கிரஸ் கட்சியின் கொள்கையில் விருப்பம் இல்லை’ என்று தெரிவித்ததாக கூறினார்.


    அன்மை காலமாகவே பாஜக தலைமைக்கும் நிதின் கட்கரிக்கும் பனிப்போர் நடைபெறுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரை கட்சியில் ஓரங்கட்டும் விதமான நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது அவரிடம் இருந்த கப்பல் மற்றும் சிறுகுறு தொழில் துறைகள் பறிக்கப்பட்டன. அவர் தற்போது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையை மட்டுமே வைத்துள்ளார்.

    இதையும் படிங்க: மோடியை முரட்டுத்தனமானவர் என்று நினைத்தேன்.. மனிதாபிமானம் மிக்கவர்..! - குலாம் நபி ஆசாத் புகழாரம்

    அதேபோல், பாஜக கட்சியின் அதிகாரம் மிக்க குழுவான கட்சி நாடாளுமன்ற குழுவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ஒரு காலத்தில் பாஜக தேசிய தலைவராக இருந்த நிதின் கட்கரி பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சி காலத்தில் மெல்ல ஓரம் கட்டப்படுவதால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: BJP, Congress, Nitin Gadkari

    அடுத்த செய்தி