Home /News /national /

2001 குஜராத் கட்ச் பூகம்ப நினைவிடம்..! பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

2001 குஜராத் கட்ச் பூகம்ப நினைவிடம்..! பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

குஜராத்

குஜராத்

நினைவக திறப்பு விழாவிற்கு உயிரிழந்த குழந்தைகளின் உறவினர்கள் மற்றும் ஆசிரியர்கள் என சுமார் 100 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Gujarat |
குஜராத்தில் 2001ஆம் ஆண்டு நிலநடுக்கத்தில் உயிரிழந்த பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்ச் மாவட்டத்தில் உள்ள அஞ்சார் நகரின் புறநகர்ப் பகுதியில் கட்டப்பட்டுள்ள 'வீர் பாலக் நினைவகத்தை' பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார்.

பிரதமர் மோடி சனிக்கிழமை குஜராத் வந்து முதல்வர் பூபேந்திர படேல், மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை சந்தித்தார். இந்த பயணத்தின்போது கட்ச் மாவட்டத்தின் புஜ் நகரில் நடைபெறும் கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார். அங்கிருந்து, அவர் கிட்டத்தட்ட 10 இப்பகுதியில் உள்ள திட்டங்களுக்கான தொடக்க விழா அல்லது அடிக்கல் நாட்டு விழாக்களை நிகழ்த்த உள்ளார்.

வீர் பாலக் நினைவகம்
ஜனவரி 26, 2001 அன்று குடியரசு தின அணிவகுப்பின் போது சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. அவர்கள் அணிவகுத்து வந்த பாதையில், ​​​​பலத்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் மற்றும் சுவர்கள் இடிந்து வீழ்ந்தது. அதில் சிக்கி 185 பள்ளி மாணவர்கள் மற்றும் 20 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அஞ்சார் நகருக்கு அருகில் வீர் பாலக் நினைவகம் கட்டப்பட்டுள்ளது.



இந்த நினைவக திறப்பு விழாவிற்கு உயிரிழந்த குழந்தைகளின் உறவினர்கள் மற்றும் ஆசிரியர்கள் என சுமார் 100 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நினைவுச் சின்னத்தில் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள், குழந்தைகள் உயிருடன் இருந்தபோது எழுதிய கட்டுரைகள், நிலநடுக்கத்தை உணரும் வகையில் சிமுலேட்டர் மற்றும் நிலநடுக்கத்தின் அறிவியல் அம்சங்களைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஐந்து பிரிவுகளைக் கொண்ட அருங்காட்சியகமும் உள்ளது. இந்த நினைவிடத்தில் இறந்த அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் சுவரில் பொரிக்கப்பட்டுள்ளன.



2001 ஆம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்க சம்பவத்தின் நெகிழ்ச்சி உணர்வை பறைசாற்ற புஜ் பகுதியில் ஸ்மிருதி வனத்தை மோடி திறந்து வைக்க உள்ளார். புஜில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையம் தொடக்கி வைப்பார். இந்தியாவில் சுசுகியின் 40 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் காந்திநகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார்.

பயணத்தின் முதல் நாளில், பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் உள்ள அடல் பாலத்தை திறந்து வைத்தார் மற்றும் சபர்மதி ஆற்றங்கரையில் நடந்த 'காதி உத்சவ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Gujarat, PM Narendra Modi

அடுத்த செய்தி