முகப்பு /செய்தி /இந்தியா / டெல்லியில் தாய், மகள் மீது கொடூர தாக்குதல் - பகீர் காட்சிகள்

டெல்லியில் தாய், மகள் மீது கொடூர தாக்குதல் - பகீர் காட்சிகள்

Viral Video

Viral Video

தாக்குதலுக்கு ஆளான தாய் மற்றும் மகள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

38 வயதாகும் தாய் மற்றும் அவரின் மகள் ஆகியோரை சாலையில் வைத்து இரும்பு குழாய்களை கொண்டு சிலர் தாக்குதல் நடத்திய  வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதலை பெண் எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் நடத்தியதாக தாக்குதலுக்கு ஆளானவர் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 19ஆம் தேதியன்று இரவு சுமார் 10 மணியளவில், டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில், இரு பெண்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் சேர்ந்து கொண்டு 38 வயது பெண் மற்றும் அவரின் மகள் மீது இரும்பு கம்பி மற்றும் கட்டைகளைக் கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகாமையில் உள்ள வீட்டின் கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியிருந்தது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த வீடியோவில் தாக்குதலுக்கு ஆளான தாய் - மகள் இருவரும் தங்களின் குடியிருப்புப் பகுதியின் பார்க்கிங்கில் காரை நிறுத்தியுள்ளனர். முதலில் அப்பெண்ணின் மகள் காரை விட்டு வெளியே இறங்கிய போது, அங்கு வந்த இரு பெண்கள் சேர்ந்து கொண்டு அவரின் மகளை அடித்து உதைத்தனர். இதனைப் பார்த்து காரை விட்டு இறங்கிய தாயையும் அப்பெண்கள் தாக்கத் தொடங்கினர். இந்த சமயத்தின் அங்கு மேலும் சில இளைஞர்கள் கையில் இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டைகளுடன் வந்து தாய், மகள் இருவரையும் கடுமையாக தாக்கத் தொடங்கினர். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த தாய், காரின் பக்கவாட்டில் சரிந்து விழுகிறார். இதன் பின்னர் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

தாக்குதலுக்கு ஆளான தாய் மற்றும் மகள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கின்றனர். இது தொடர்பாக இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் தாக்குதலை தொடங்கிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். எஞ்சியவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.

Also read:  எந்நேரமும் வெளிநாட்டிலேயே இருக்க முடியாது - ராகுல் காந்தியை வாரிய மம்தா பானர்ஜி

38 வயதான பெண் அளித்த புகாரின்படி, “நானும் எனது மகளும், நவம்பர் 19ம் தேதி இரவு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பந்தனா குமாரியின் ஆட்களால் அடித்து நொறுக்கப்பட்டோம். எம்.எல்.ஏ பந்தனா குமாரியின் கணவர் மீது 2019ஆம் ஆண்டு நான் போலீசில் புகார் அளித்ததால் அவர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். பெண் எம்.எல்.ஏவின் தவறான விஷயங்களை நான் அம்பலப்படுத்தி வருவதால் எனக்கு இது நேர்ந்துள்ளது. ஏற்கனவே எம்.எல்.ஏ மற்றும் அவரின் கணவர் மீது பல வழக்குகள் உள்ளன என தெரிவித்துள்ளார்.

எனினும் எம்.எல்.ஏ பந்தனா குமாரி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், இவை முற்றிலும் பொய்யானது என தெரிவித்தார். அப்பெண் (தாக்குதலுக்கு ஆளானவர்) எனது அருகாமையில் தான் வசித்துவருகிறார். என் மீது அவர் குறைகூறுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அவரின் குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என பந்தனா தெரிவித்தார்.

First published:

Tags: Delhi, Trending, Viral Video