மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலில் 4 வயது சிறுமியை தெரு நாய்கள் கூட்டமாக துரத்திச் சென்று, கடித்த கொடூர சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
அந்த தெருநாய்களை அவ்வழியே சென்ற ஒருவர் விரட்டிய பின்னரே சிறுமியை கடிப்பதை விட்டு நாய்கள் நகர்ந்து சென்றன. தொடர்ந்து, அச்சிறுமி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கூலித்தொழிலாளியின் மகளான 4 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவரை கூட்டமாக தெரு நாய்கள் துரத்தியுள்ளன. நாய்களிடம் இருந்து தப்பிக்க அந்த சிறுமி சிறிது தூரம் ஓடுகிறார். அப்போது, அவர் எதிர்பாராத விதமாக கீழே தடுக்கி விழுந்ததால், தெரு நாய்கள் சுற்றி வளைத்து கடிக்க துவங்கின.
Horrific! Stray dogs mauled a 4 year old girl in Bhopal a passerby threw stones at the dogs and chased them away. The child has been hospitalized with severe injuries. pic.twitter.com/X4EyruZxra
— Anurag Dwary (@Anurag_Dwary) January 2, 2022
காண்போரை பதைபதைக்க செய்ய வைக்கும் வகையில் சில நிமிடங்களுக்கு சிறுமியை சுற்றியிருந்த நாய்கள் கடித்து குதறுகின்றன. அந்த சமயத்தில் அவ்வழியே சென்ற ஒருவர் விரைந்து செயல்பட்டு கல்லை வீசி நாய்களை விரட்டியடித்தார். இதன் பின்னரே நாய்கள் அங்கிருந்து தப்பிச்சென்றன.
போபாலின் பாக் செவானியா பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆள்நடமாட்டாம் குறைவாக இருக்கும் சமயத்தில் இந்த சம்பவம் நிகழந்ததால் சிறுமியை காப்பாற்ற யாரும் இல்லாமல் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
போபாலில் தெரு நாய்கள் இதுபோன்ற விபரீதமானதாக மாறியுள்ளன.கடந்த ஆண்டு, கோஹெபிசா பகுதியில், ஏழு வயது சிறுமி அவரது தாய் முன்னிலையில் தெருநாய்களால் தாக்கப்பட்டார்.
2019 ஆம் ஆண்டில், ஆறு வயது சிறுவன் ஒருவன் அவனது தாய்க்கு முன்னால் அரை டஜன் தெருநாய்களால் அடித்துக் கொல்லப்பட்டான். சிறுவனைக் காப்பாற்ற முயன்ற சிறுவனின் தாய் பலத்த காயமடைந்தார். தகவல்களின்படி, போபாலில் 1 லட்சத்திற்கும் அதிகமான தெரு நாய்கள் உள்ளன.
Also read: Omicron | உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரான்... நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.