Home /News /national /

சுங்கச்சாவடியில் மோதி விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்.. தூக்கிவீசப்பட்ட நோயாளி - பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியானது

சுங்கச்சாவடியில் மோதி விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்.. தூக்கிவீசப்பட்ட நோயாளி - பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியானது

சுங்கச்சாவடியில் மோதி ஆம்புலன்ஸ் கோர விபத்து

சுங்கச்சாவடியில் மோதி ஆம்புலன்ஸ் கோர விபத்து

மழை பெய்து சாலையில் நீர் தேங்கி இருந்ததால், திடீரென பிரேக் பிடிக்கையில் வேகமாக வந்த ஆம்புன்ஸ்சின் டையர் வழுக்கியது இந்த கோர விபத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது.

    கர்நாடகா மாநிலத்தில் டோல் பிளாசா அருகே ஆம்புலன்ஸ் ஒன்று கட்டுப்பாடு இழந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பதைபதைக்க வைக்கும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    கர்நாடகா மாநிலம் உடுப்பி அருகே உள்ள சிருரு என்ற கிராம பகுதியில் NH 66 தேசிய நெடுஞ்சாலையும், சுங்கச்சாவடியும் உள்ளன. சம்பவம் நடைபெற்ற புதன் கிழமை அன்று அப்பகுதியில் மழை பொழிந்து கொண்டிருந்தது. அப்போது குண்டாபூரா என்ற பகுதியில் இருந்து ஹோன்னாவாரா என்ற பகுதிக்கு ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளி மற்றும் அவருடன் நான்கு பேரை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது. இந்த ஆம்புலன்ஸ்சின் ஓட்டுனர் மிக வேகமான முறையில் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.

    இதையும் படிங்க: ரூ.1 கோடி செலவு.. 26 மணிநேர பயணம் - அமெரிக்காவில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த பெண்

    அவர் சுங்கச்சாவடி தடுப்புகளை கவனிக்காமல் அதே வேகத்திலேயே சுங்கச்சாவடி அருகே வந்த நிலையில், சுங்க ஊழியர் அவசர அவசரமாக தடுப்புகளை அகற்றி வழிக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதற்குள் சுங்கச்சாவடிக்கு அருகே ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. ஆம்புலன்ஸ்சின் வேக கட்டுப்பாட்டை ஓட்டுநர் தவறவிட்ட நிலையில், அவர் திடீரென பிரேக் பிடித்தபோது ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி சுங்கச்சாவடி சுவரில் கடும் வேகத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


    ஆம்புலன்ஸ் மோதிய வேகத்தில் அதில் பயணித்தவர் வாகனத்திற்கு வெளியே தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் நோயாளி, அவரின் மனைவி, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் என ஆம்புலன்ஸ்சில் பயணித்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மழை பெய்து சாலையில் நீர் தேங்கி இருந்ததால், திடீரென பிரேக் பிடிக்கையில் வேகமாக வந்த ஆம்புன்ஸ்சின் டையர் வழுக்கியது இந்த கோர விபத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Accident, Ambulance, Toll Plaza, Viral Video

    அடுத்த செய்தி