99 நாள் சிறைவாழ்க்கை...சிதம்பரத்தை நேரில் சந்தித்த ராகுல், பிரியங்கா..!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் சிதம்பரத்தை நேரில் சந்தித்தனர்.

99 நாள் சிறைவாழ்க்கை...சிதம்பரத்தை நேரில் சந்தித்த ராகுல், பிரியங்கா..!
ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி
  • News18
  • Last Updated: November 27, 2019, 12:23 PM IST
  • Share this:
ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறைக்குச் சென்று இன்றோடு 99 நாளாகிறது. இன்று காலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா ஆகியோர் திகாருக்குச் சென்று ப.சிதம்பரத்தை சந்தித்துள்ளனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ சிதம்பரத்தைக் கைது செய்தது. ஆனால், சிபிஐ வழக்கில் அக்டோபர் 22-ம் தேதி சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால், அமலாக்கத்துறையினர் தொடர்ந்த வழக்கில் அக்டோபர் 16-ம் தேதி கைது செய்யப்பட்ட சிதம்பரம் நவம்பர் 27-ம் தேதி வரையில் சிறையில் இருக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் சிறையில் உள்ள சிதம்பரத்தை இன்று காலை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோர் திகார் சிறைக்குச் சென்று சந்தித்தனர். இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் கூறுகையில், ”இன்று எனது தந்தையை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோர் வந்து சந்தித்தனர். காங்கிரஸ் தலைமை எனது தந்தையுடன் தான் உள்ளது என்பதை இந்த சந்திப்பு உறுதிபடுத்தியுள்ளது. 99 நாட்களாக சிறையில் உள்ள எனது தந்தைக்கு உச்ச நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.


கடந்த திங்கட்கிழமைதான் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் சசி தரூர் மற்றும் மனிஷ் திவாரி ஆகியோர் சிறையில் சிதம்பரத்தை நேரில் சந்தித்தனர். அதற்கும் முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் சிதம்பரத்தை நேரில் சந்தித்தனர்.

மேலும் பார்க்க: புதிய தொழிலாளர் சட்டத்தால் தொழிலாளர்களை விட முதலாளிகளுக்கே லாபம்..!
First published: November 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்