தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ் விமான பயணிகள் மூலமாக, சர்வதேச நாடுகளுக்கும் பரவி வருகிறது. வெளிநாடுகள் விழிப்புணர்வு இருந்தாலும்கூட, தற்போதைய தகவலின்படி 13 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
இந்த வைரஸ் குறித்து மாநில அரசுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. இந்த நிலையில் சர்வதேச விமான போக்குவரத்து சேவையை, மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், 'ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு சில நாடுகள் தடை விதித்துள்ளன. இந்தியா ஏன் இன்னும் அதை செய்யாமல் இருக்கிறது?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்
இதன் தொடர்ச்சியாக விமான போக்குவரத்து சேவையை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமருக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ''கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸை எதிர்த்து ஒட்டு மொத்த இந்தியாவே கடுமையாக போராடியது. தன்னலமற்ற செயல் வீரர்களின் உழைப்பால் கொரோனா பாதிப்பிலிருந்து நாம் மீண்டு வருகிறோம்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல், ஜப்பான் உள்ளிட்டவை சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதித்து இருக்கின்றன. ஒமைக்ரான் அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு மத்திய அரசும் சர்வதேச விமான போக்குவரத்து சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த நடவடிக்கையை தாமதப்படுத்தினால் மிக மோசமான விளைவுகளை இந்தியா சந்திக்க நேரலாம்'' என்று கூறியுள்ளார்.
Also Read : Omicron: ஒமிக்ரான் வகை கொரோனா அச்சுறுத்தல்: மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்!
கெஜ்ரிவாலை போன்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், வைரஸ் பாதிக்கப்பட்ட 12 நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென்று உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டுள்ளார். சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை நிறுத்தம் குறித்து மத்திய அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : ஒமைக்ரான் உலகளவில் மிக அதிக ஆபத்தை ஏற்படுத்தும் - WHO எச்சரிக்கை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arvind Kejriwal, Modi, Omicron