ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட வீரியமான ஒமைக்ரான் வைரஸ் - அடுத்த அலை தொடங்கும் அபாயம்!?

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட வீரியமான ஒமைக்ரான் வைரஸ் - அடுத்த அலை தொடங்கும் அபாயம்!?

ஓமிக்ரான் BF.7 வைரஸ்

ஓமிக்ரான் BF.7 வைரஸ்

ஒமைக்ரான் BF.7 வகை வைரஸ் இந்தியாவில் பரவுமா? முதல் வைரஸ் குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Gujarat, India

  இரண்டு ஆண்டுகள் கழித்து கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வரும் நிலையில் மிகவும் வீரியமான ஒமைக்ரான்  BF.7 வகை வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தில் ஒமைக்ரான் BF.7 வகை கண்டுப்பிடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒமைக்ரான் துணை வகைகளான BA.5.1.7 மற்றும் BF.7 வைரஸ்கள் மங்கோலியாவில் தோன்றிய நிலையில் தற்போது அவை இந்தியாவில் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.

  இந்த வகை வைரஸ் மிகவும் வீரியத்துடன் செயல்படும் என்றும் இதனின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்ததையடுத்து பல தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

  தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த வகை கொரோனா வைரஸ் பண்டிகைக்கால கொண்டாத்தின் போது பரவ வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒமைக்ரான் BF.7 வகை வைரஸ் இதர வகை வைரஸ்களை காட்டிலும் மிகவும் வேகமாகப் பரவக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read : சென்னை டூ பெங்களூரு வழித்தடம்.. தென்னிந்தியாவில் அறிமுகமாகும் வந்தே பாரத் ரயில்.!

  பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

  Published by:Janvi
  First published:

  Tags: CoronaVirus, Omicron