ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பின் தற்போதைய நிலை என்ன? அப்டேட் வெளியிட்ட மத்திய அரசு

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பின் தற்போதைய நிலை என்ன? அப்டேட் வெளியிட்ட மத்திய அரசு

Omicron

Omicron

வட மாநிலங்கள் ஒவ்வொன்றாக ஊரடங்கை அறிவித்து வருகின்றன. மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், நேற்று ஊரடங்கை அறிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் குறித்த அப்டேட்டை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. வட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், தேசிய அளவில் ஊரடங்கு ஏதேனும் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்த நிலையில், அவர்களில் 3 பேர் குணம் அடைந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி ஏற்கெனவே வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் ஒமைக்ரான் தாக்கலாம். இரண்டு தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கலாம் என்பதால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் காணப்படுகிறது.

வட மாநிலங்கள் ஒவ்வொன்றாக ஊரடங்கை அறிவித்து வருகின்றன. மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், நேற்று ஊரடங்கை அறிவித்தார். இதன்படி, இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு, ஊரடங்கு செயல்படுத்தப்படும். இதேபோன்று அறிவிப்பை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று வெளியிட்டுள்ளார்.

கொரோனா மற்றும் புதிய ஓமைக்ரான் வேரியண்ட் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இதையும் படிங்க : கேரள அரசியல் கொலைகள் : சோசியல் மீடியா அட்மின்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல பரிந்துரைகள் பரீசலிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஒப்பந்த பணியாளர்களின் பணி காலம் வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதியுடன் முடிவடையவுள்ளதால், தொற்று அதிகரித்தால் பணியாளர்கள் தேவை என்பதை கருத்தில் கொண்டு மேலும் நீட்டிப்பு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சாதிக்க எதுவும் தடையில்லை..! அரசு வேலையில் சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்

 இந்நிலையில், ஒமைக்ரான் பாதிப்பு இந்தியாவில் 358 ஆக உயர்ந்துள்ளது. 17மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 88 பேருக்கும், டெல்லியில் 67 பேருக்கும், தெலங்கானாவில் 38 பேருக்கும், தமிழ்நாட்டில் 34 பேருக்கும், கர்நாடகாவில் 31 பேருக்கும் குஜராத்தில் 30 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று உள்ளது. இவர்களில் 122 பேருக்கு அறிகுறிகள் சற்று அதிகமாக தென்பட்டுள்ளன. 114 பேர் குணமடைந்த நிலையில், 244 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

First published:

Tags: Omicron