Home /News /national /

இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான்... புதிய கட்டுப்பாடுகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான்... புதிய கட்டுப்பாடுகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனா திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226- ஆக அதிகரித்துள்ளது. கென்யாவிலிருந்து சென்னை வழியாக ஆந்திரா சென்ற பெண்ணுக்கு, ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    உலகம் முழுவதிலும் 89 நாடுகளுக்கு பரவியுள்ள ஒமைக்ரான் திரிபால்இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226- ஆக அதிகரித்துள்ளது. அதிக பட்சமாக டெல்லியில் 57 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது.

    இதனிடையே கென்யாவிலிருந்து சென்னை வழியாக ஆந்திரா சென்ற பெண்ணுக்கு, ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அந்த பெண்ணுக்கு கொரோனா உறுதியாகி, மரபணு சோதனையில் ஒமைக்ரான் திரிபு கண்டறியப்பட்டதாக ஆந்திர சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆந்திராவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2- ஆக அதிகரித்துள்ளது.  கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  ஒமைக்ரான் கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

    தமிழ் நாட்டில் ஒமைக்ரான் அறிகுறி இருக்கும் 69 பேரின் மாதிரி முடிவுகள் விரைவில் வெளிவரும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுவரை ஒமைக்ரான் அறிகுறி இருக்கும் 89 பேரின் மாதிரிகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் 13 பேரின் முடிவுகள் ஏற்கெனவே வந்துவிட்டதாகவும் கூறினார். 

    Also Read : படுத்துக்கொண்டே நீதிமன்ற விசாரணையில் பங்கேற்ற முன்னாள் டிஜிபிக்கு நீதிபதி எச்சரிக்கை

    கொரோனா நிலவரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வியாழன் நடைபெறவுள்ள கூட்டத்தில் ஒமைக்ரான் பரவல் குறித்தும், புதிய கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    அமெரிக்காவில் செவ்வாயன்று ஒரே நாளில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 798 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 2 ஆயிரத்து 78 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதேபோல் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இஸ்ரேலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 4-வது பூஸ்டர் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    Also Read : பழங்குடியினரை மதமாற்ற முயற்சி செய்ததாக 4 மதபோதகர்கள் கைது

    இதனால் கிறிஸ்துமஸ்- க்கு பின்னர் கட்டுப்பாடுகளை கடுமையாக்க பெரும்பாலான நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. டெல்டா வைரசை விட அதிக வேகமாக பரவும் ஒமைக்ரான், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களையும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களையும் தாக்குவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Omicron, PM Modi

    அடுத்த செய்தி