Home /News /national /

வட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு.. ஒமைக்ரான் பரவலைத் தொடர்ந்து நடவடிக்கை

வட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு.. ஒமைக்ரான் பரவலைத் தொடர்ந்து நடவடிக்கை

ஒமைக்ரான் வைரஸ்

ஒமைக்ரான் வைரஸ்

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது.

    ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதை கவனத்தில் கொண்ட வட மாநிலங்களில் ஊரடங்கு அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நேற்று மாலை பிரதமர் மோடி ஒமைக்ரான் பரவல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். அதன் அடிப்படையில் எந்த நேரத்திலும் மத்திய அரசு ஊரடங்கு தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது.மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 57 பேருக்கும், டெல்லியில் 54 பேருக்கும், தெலங்கானாவில் 24 பேருக்கும், கர்நாடகாவில் 19 பேருக்கும், ராஜஸ்தானில் 18 பேருக்கும், கேரளாவில் 15 மற்றும் குஜராத்தில் 14 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க : தமிழகத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கிய ஒமைக்ரான்… தொற்று எந்த வேகத்தில் பரவும்? தீவிரம் எவ்வாறு இருக்கும்?- ஆய்வு சொல்லும் தகவல்

    தற்போது தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்த நிலையில், அவர்களில் 3 பேர் குணம் அடைந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி ஏற்கெனவே வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் ஒமைக்ரான் தாக்கலாம். இரண்டு தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கலாம் என்பதால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் காணப்படுகிறது.

    இதையும் படிங்க : ஒமைக்ரான் அறிகுறிகள் எப்படி இருக்கும்..? அறிகுறிகள் தென்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?

    இந்த நிலையில், வட மாநிலங்கள் ஒவ்வொன்றாக ஊரடங்கை அறிவித்து வருகின்றன. மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், நேற்று ஊரடங்கை அறிவித்தார். இதன்படி, இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் கட்டுப்பாடுகள் கடுமையாகப்பட்டு, ஊரடங்கு செயல்படுத்தப்படும். இதேபோன்று அறிவிப்பை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று வெளியிட்டுள்ளார்.

    இதையும் படிங்க : Omicron Cases: தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று - சுகாதாரத்துறை தகவல்

    மேலும் சில மாநிலங்கள் இதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தின்போது உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் மேலும் 2 மாதங்களுக்கு தேர்தலை ஒத்தி வைக்க தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

     
    Published by:Musthak
    First published:

    Tags: Omicron

    அடுத்த செய்தி