Home /News /national /

அரசு அலுவலகங்களில் 50 விழுக்காடு பணியாளர்கள் பணிக்கு வந்தால் போதும் - மத்திய அரசு!

அரசு அலுவலகங்களில் 50 விழுக்காடு பணியாளர்கள் பணிக்கு வந்தால் போதும் - மத்திய அரசு!

மாதிரி படம்

மாதிரி படம்

மத்திய அரசுப் பணியிலுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் நேரடியாக அலுவலகத்துக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக மத்திய அரசு அலுவலகங்களில் 50 விழுக்காடு பணியாளர்கள் பணிக்கு வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிப்பால், மும்பையில் ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மும்பையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் நேரடி வகுப்புகளில் பங்கேற்க உள்ளனர். ஜார்க்கண்டில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் வரும் 15ம் தேதி வரை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    எதிர்வரும் சங்கராந்தி பண்டிகை மற்றும் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் நோக்கில் தெலங்கானாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வரும் 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை மூடப்படுவதாக முதலமைச்சர் சந்திர சேகரராவ் அறிவித்துள்ளார்.

    Also read... 12-ம் தேதி புதுச்சேரி வருகிறார் பிரதமர் - தமிழிசை சௌந்தரராஜன் தகவல்!

    சத்தீஸ்கரில் விமான நிலையங்கள், ரயில்நிலையங்களில் பரிசோதனைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களில் செயலாளர்கள் மட்டத்துக்கு கீழ் உள்ளவர்கள் 50 விழுக்காடு பேர் வீட்டிலிருந்தே பணியாற்ற அரசு அனுமதி அளித்துள்ளது.

    Also read... 34 மாணவர்களுக்கு கொரோனா - அரசு பள்ளி மாணவர்களுக்கான போட்டித் தேர்வு பயிற்சி மையம் மூடல்!

    மத்திய அரசுப் பணியிலுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் நேரடியாக அலுவலகத்துக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Government office

    அடுத்த செய்தி