ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஓமைக்ரான் பரவல் எதிரொலி... இந்தியாவின் 6 மாநிலங்களில் இரவு ஊரடங்கு!

ஓமைக்ரான் பரவல் எதிரொலி... இந்தியாவின் 6 மாநிலங்களில் இரவு ஊரடங்கு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று பாதிப்பு 358 ஆக உயர்ந்துள்ளதால் பல்வேறு மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு ஊடங்கு, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை ஆகிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஓமைக்ரான் (Omicron) வகை வைரஸ் தொற்று வேகமாக பரவு வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உட்பட 6 மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஓமைக்ரான் வகை வைரஸ் பரவல் அதிகரித்துவருகிறது. தற்போதுவரை 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 358 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா,டெல்லி ஆகிய மாநிலங்களில் பரவல் அதிகமாக பதிவாகியுள்ளது. தொற்று இரட்டிபாகும் காலம் 1.5 நாளாக உள்ளதாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

ஓமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்கள் மீண்டும் இரவு நேர ஊடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளன. டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்டோர் குறைந்தபட்சம் கொரோனாவுக்கு எதிராக ஒரு தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ள போதிலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான ஓமிக்ரான் தொற்று பதிவாகியுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.  இரவு நேரங்களில் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: MIG-21: இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக்-21 விமானம் விபத்து: பைலட் உயிரிழப்பு!

முன்னதாக,  டிசம்பர் 31 நள்ளிரவு வரை மும்பையில் 144 தடையை மாநில அரசு  விதித்துள்ளது. பெருநகரங்களில் உள்ள கடற்கரைகள் அல்லது சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் சமூகக் கூட்டங்கள் எதுவும் நடைபெறக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது மற்றும் மக்கள் கோவிட்-19 நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.

குஜராத் அரசு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், பாவ்நகர், ஜாம்நகர், காந்திநகர் மற்றும் ஜூனாகத் ஆகிய இடங்களில் டிசம்பர் 25 முதல் இரவு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக அறிவித்தது.

ஹரியானா மாநிலத்தில் ஜனவரி 1, 2022 முதல் இரவு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும். நிகழ்வுகளில் 200 பேருக்கு மேல் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஹரியானாவில் ஜனவரி 1, 2022 முதல், முழுமையாக தடுப்பூசி செலுத்தாத நபர்கள் மால்கள், சினிமா அரங்குகள் மற்றும் உணவகங்கள் போன்ற நெரிசலான இடங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றுஅறிவிக்கப்பட்டது.

மேலும் படிங்க: இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பின் தற்போதைய நிலை என்ன? அப்டேட் வெளியிட்ட மத்திய அரசு

கர்நாடக அரசும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும், தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மற்றும் பிரார்த்தனை கூட்டங்களுக்கு எந்த தடையும் கிடையாது.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்,  டிசம்பர் 25 முதல் மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவு உட்பட கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்க உத்தரவுகளை பிறப்பித்தார். இரவு ஊரடங்கு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை அமுலில் இருக்கும். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை 200 ஆகக் கட்டுப்படுத்தவும் முதல்வர் யோகி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அனைத்து வணிகர்களும் தங்கள் நிறுவனங்களில் "முகமூடி இல்லை, பொருட்கள் இல்லை" கொள்கையைப் பின்பற்றுவதை உறுதிசெய்யவும் ஆதித்யநாத் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். டிசம்பர் 31ம் தேதிவரை லக்னோ மற்றும் நொய்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Corona spread, Night Curfew, Omicron