Home /News /national /

ஓமைக்ரான் கொரோனா வைரஸ் நுரையீரலை பாதிக்குமா?- ஆய்வில் விளக்கம்

ஓமைக்ரான் கொரோனா வைரஸ் நுரையீரலை பாதிக்குமா?- ஆய்வில் விளக்கம்

ஓமைக்ரான் நுரையீரலை பாதிக்குமா?

ஓமைக்ரான் நுரையீரலை பாதிக்குமா?

உலகை உலுக்கி வரும் கொரோனாவின் புதுவகை உருமாறிய ஓமைக்ரான் டெல்டா வகை வைரஸ்களை விட அதிவேகமாகப் பரவக்கூடியது என்றாலும் நுரையீரலை சட்டென பாதித்து விடாது, மெதுவாகவே பாதிக்கும் என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

    உலகை உலுக்கி வரும் கொரோனாவின் புதுவகை உருமாறிய ஓமைக்ரான் டெல்டா வகை வைரஸ்களை விட அதிவேகமாகப் பரவக்கூடியது என்றாலும் நுரையீரலை சட்டென பாதித்து விடாது, மெதுவாகவே பாதிக்கும் என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

    டெல்டா வகை வைரஸ், டெல்டாவிலிருந்து உருமாறிய டெல்டா பிளஸ் வகைகள் முதலில் தொற்றுவதே நுரையீரலில்தான். அதனால்தான் பல்ஸ் ரேட் இறங்கி ஆக்சிஜன் அளவு கடுமையாக சரசரவென குறைந்து மரணம் ஏற்படுகிறது. ஆனால் ஓமைக்ரான் அப்படியல்ல மெதுவாகவே அது நுரையீரலைத் தாக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    டெல்டா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அடுத்த சில நாட்களில் மனிதர்களின் நுரையீரலை மிக மோசமாக பாதித்துவிடும். அந்த அளவோடு ஒப்பிடும்போது, 10 மடங்கு குறைவான பாதிப்பையே ஒமைக்ரான் ஏற்படுத்தும் எனத் தெரியவந்துள்ளது.

    ஹாங்காங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எல்கேஎஸ் மருந்துத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒமைக்ரான் வைரஸ் குறித்தும், தீவிரத் தன்மை குறித்தும் ஆய்வு நடத்தி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

    நுரையீரலின் ஒவ்வொரு பகுதியின் கீழ்பகுதியிலும் இருக்கும் காற்றுக்குழாயின் முடிவில் இருக்கும் இரண்டு சுவாசக்குழாய்கள் ‘y’ வடிவில் ஒவ்வொரு நுரையீரலுக்கும் பிரிகிறது. ஆனால் இந்த ஆய்வில் நுரையீரலுக்குள் ஆழமாக ஓமைக்ரான் ஏன் ஊடுருவ முடியவில்லை என்பது பற்றி இந்த ஆய்வு விளக்கவில்லை. இந்த ஆய்வுமே இதே துறையில் உள்ள மற்ற நிபுணர்கள் கல்வியியாளாளர்கள், பிற ஆய்வாளர்களின் மதிப்பாய்வுக்காக காத்திருப்பதுதான்.

    பொதுவாக நிராகரிக்கப்பட்ட நுரையீரல் திசுவை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஓமைக்ரான் சார்ஸ் கோவிட்-1 வைரஸை தனியே பிரித்து 2020ம் ஆண்டு உருவான சார்ஸ் கோவிட்-2 வைரஸ் உடன் ஒப்பு நோக்கப்பட்டது. அதாவது டெல்டாவுக்கும் ஓமைக்ரானுக்கும் உள்ள நுரையீரல் பாதிப்பு விகிதம் கண்டறியப்பட்டது. அதில் ஓமைக்ரான் வைரஸ் டெல்டாவை விட 24 மணி நேரத்தில் 70 மடங்கு தன்னை இன்னொன்றாக பிரதியெடுப்பது தெரியவந்தது. மாறாக மற்ற வைரஸ்களை விட நுரையீரலில் ஓமைக்ரான் 10 மடங்குக்கும் குறைவான அளவிலேயே தன்னை பிரதியெடுக்கிறது.

    Also Read: ஓமைக்ரான் உச்சம்- பிரிட்டனில் ஒரே நாளில் 78,000 பேருக்குதொற்று- அமெரிக்காவிலும் நாளுக்குநாள் அதிகரிப்பு

    ஒமைக்ரான் வைரஸ் குறைவான சக்தியுடைய கிருமியாக இருந்தாலும், அதிகமான மக்களை பாதிக்கும்போது, நோயின் தீவிரம் அதிகமாகி, உயிரிழப்பையும் அதிகரிக்க வைக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒமைக்ரான் வைரஸ், தடுப்பூசி அளிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கிறது. ஏற்கெனவே கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்திருந்தாலும் அதிலிருந்து தப்பிக்கிறது எனத் தெரியவந்துள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Corona, Delta+ variant, Omicron

    அடுத்த செய்தி