Home /News /national /

ஒமைக்ரான் பரவல்‌: மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுரை!

ஒமைக்ரான் பரவல்‌: மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுரை!

ஒமைக்ரான்‌ வைரஸ் தொற்றை எதிர்‌ கொள்ள மாநிலங்களுடன், மத்திய அரசு காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டது.

ஒமைக்ரான்‌ வைரஸ் தொற்றை எதிர்‌ கொள்ள மாநிலங்களுடன், மத்திய அரசு காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டது.

ஒமைக்ரான்‌ வைரஸ் தொற்றை எதிர்‌ கொள்ள மாநிலங்களுடன், மத்திய அரசு காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டது.

    உருமாறிய கொரோனா பரவலுக்கு மத்தியில்‌, முக்கிய மருந்துகளின்‌ போதுமான கையிருப்பை உறுதி செய்யுங்கள் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவறுத்தி உள்ளது.

    கொரோனா வைரஸ்‌ தொற்றின்‌ 2-வது அலையை முடிவுக்கு கொண்டுவர முழு வீச்சுடன்‌ நாடே போராடி வருகிறது. இதற்கு மத்தியில்‌ உருமாறிய கொரோனாவாக ஒமைக்‌ரான்‌ வைரசும்‌ களத்தில்‌ குதித்து இருக்கிறது.

    இந்த தருணத்தில், ஒமைக்ரான்‌ வைரஸ் தொற்றை எதிர்‌ கொள்வதற்கான தயார்‌ நிலை, தடுப்பூசி திட்டத்தின்‌ நிலவரம்‌ குறித்து ஆய்வு செய்வதற்கான மாநிலங்களுடனும்‌, யூனியன்‌ பிரதேசங்களுடனும்‌ மத்திய அரசு நேற்று காணொலி காட்சி வழியாக ஒரு ஆலோசனை கூட்டம்‌ நடத்தியது.

    இந்த கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர்‌ ராஜேஷ்‌ பூஷண்‌ தலைமை தாங்கினார்‌. மாநிலங்கள்‌ மற்‌றும் யூனியன்‌ பிரதேசங்களின்‌ சுகாதாரத்துறை முதன்மை செயலாளர்களும்‌, உயர்‌ அதிகாரிகளும்‌ கலந்து கொண்டனர்‌.

    இந்த கூட்டத்தில்‌ ஓமைக்‌ரான்‌ வைரஸ் தொற்றை எதிர்‌கொள்வதற்காக செய்யப்பட்‌டுள்ள ஏற்பாடுகள்‌ பற்றியும்‌, கொரோனா தடுப்பூசி திட்‌டத்தில்‌ ஏற்பட்டுள்ள முன்‌னேற்றம்‌ குறித்தும்‌ மாநிலங்களிடமும்‌, யூனியன்‌ பிரதேசங்‌களிடமும்‌ மத்திய சுகாதாரத்‌துறை செயலாளர்‌ ராஜேஷ்‌ பூஷண்‌ கேட்டறிந்தார்‌.

    இந்தகூட்டத்துக்கு பின்னர்‌ மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள், மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள வென்டிலேட்டர்கள் இன்னும் சில மருத்துவமனைகளில் பேக்கிங் கூட பிரிக்கப்படாமலும், பயன்படுத்தாமலும் இருப்பதாகவும் தெரியவந்துள்ளதாகவு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

    எனவே எல்லா மருத்துவமனைகளிலும் வென்டிலேட்டர்கள் நிறுவப்பட்டு செயல்படுகிற நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆக்சிஜன் ஆலைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் செயல்பாட்டில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

    Must Read : முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு

    பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். கண்காணிப்பில் கவனம் செலுத்த வேண்டும் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் வசதியாக அவர்களை சீக்கிரமாக அடையாளம் காண வேண்டும். எல்லா மாவட்டகளிலும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.

    அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பதை கண்காணிக்க வேண்டும், கொரோனா உறுதி செய்யப்படுகிற நிலையில் மரபணு வரிசைப்படுத்தலுக்கு பகுப்பாய்வு கூடங்களுக்கு மாதிரிகளை அனுப்பி வைக்க வேண்டும்.

    தீவிரமாக பரவி வருகிற ஹாட்ஸஃபாட்டுகளை 2 தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுவதை கண்காணிப்பதை உறுதி செய்வது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் அதை சந்திக்க ஏதுவாக மருத்துவமனை கட்டமைப்புகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    Also read: ராஜஸ்தானில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 9 பேரும் குணமடைந்தனர்

    கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிற 8 முக்கிய மருந்துகள் போதுமான அளவுக்கு கையிருப்பு வைக்கப்பட வேண்டும். குளிர் காலத்தை கருத்தில் கொண்டு, இன்புளூவன்சா போன்ற நோய்கள் பரவல், கடுமையான சுவாச தொற்று மற்றும் சுவாச கோளாறு அறிகுறிகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Covid-19, COVID-19 Second Wave, Omicron

    அடுத்த செய்தி