Home /News /national /

ஒமைக்ரானால் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படலாம் - தடுப்பூசி தேவை

ஒமைக்ரானால் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படலாம் - தடுப்பூசி தேவை

Omicron

Omicron

டெல்டாவினால் 100 பேருக்கு பாதிப்பு என்றால் ஒமைக்ரான் 500 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    ஒமைக்ரானால் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படலாம் என்பதால் குழந்தைகளுக்கு தடுப்பூசி அறிமுகப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் உருமாறிய கொரோனா நிறைய குழந்தைகளை பாதிக்கலாம் என்பதால் 18 வயதுக்கு கீழானவர்களுக்கு தடுப்பூசி அறிமுகப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    குழந்தைகளில் ACE receptor எனப்படும் கொரோனா வைரஸ் ஒட்டிக் கொள்ளும் செல்கள் வளராமல் இருப்பதால் அவர்களுக்கு ஒமைக்ரானால் தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் அதிக குழந்தைகளுக்கு தொற்று உலக அளவில் பரவி வருகிறது. தென் ஆப்பிரிகாவில் ஆல்பா, டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை விட ஒமைக்ரான் தொற்றுக்கு அதிக குழந்தைகள் ஆளாகி வருகின்றனர்.

    ஒமைக்ரான் அதிகம் பரவும் தன்மைதன்மை கொண்டதாலும் இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த தொடங்கவில்லை என்பதாலும் குழந்தைகளிடம் தொற்று அதிகம் பரவலாம் என தொற்று நோய் நிபுணர் ராம் கோபாலகிருஷ்ணன் தெரிவிக்கிறார். "

    இதையும் படிங்க:   அரசு நிதியுதவிக்காக சொந்த சகோதரியை திருமணம் செய்த நபர்

    டெல்டாவினால் 100 பேருக்கு பாதிப்பு என்றால் ஒமைக்ரான் 500 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். தீவிர பாதிப்பு குறைந்த நபர்களுக்கே ஏற்படும் என்றாலும் அதன் எண்ணிக்கையும் கடந்த அலைகளை விட அதிகமாக இருக்கலாம். எனவே உடனடியாக குழந்தைகளுக்கு தடுப்பூசி அறிமுகப்படுத்த வேண்டும். அதே போன்று பூஸ்டர் டோஸ்களும் போட்டால் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டால் லேசான சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளே குழந்தைகளில் காணப்படும்" என்றார்.

    இந்தியாவில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக தடுப்பூசி செலுத்த தொடங்க வேண்டும் என குழந்தைகள் தீவிர சிகிச்சை மருத்துவர் முத்தையா பெரியகருப்பன் தெரிவிக்கிறார். " இந்தியாவில் தற்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒமைக்ரான் அதிகம் பரவினால் மீண்டும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும். எனவே அவர்களுக்கு தடுப்பூசி அறிமுகப்படுத்த வேண்டும். தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரிட்டனில் குழந்தைகளிடம் தீவிர பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் தொற்று வேகமாக பரவுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. எனவே பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடிய நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம் ஆகும். " என்றார்.

    இதையும் படிங்க:  பாதுகாப்பு படையினரின் துணையோடு 20 ஆண்டுகளுக்கு பின் காஷ்மீரில் விவசாயம்

    ஒமைக்ரான பரவி வரும் வேளையில் ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் 18 வயதுக்கு கீழான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த தொடங்கியுள்ளன.

    இந்தியாவில் ஊசி இல்லா zycov d என்ற தடுப்பூசி மற்றும் கோவாக்சின் தடுப்பூசி குழந்தைகளுக்கு விரைவில் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    Published by:Arun
    First published:

    Tags: Corona, Corona Vaccine, Covid-19 vaccine, Omicron

    அடுத்த செய்தி