ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஓமைக்ரான் அச்சுறுத்தல் : குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டுமா?

ஓமைக்ரான் அச்சுறுத்தல் : குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டுமா?

தடுப்பூசி

தடுப்பூசி

ஓமைக்ரான் கொரோனா பாதிப்பு உங்களுக்கு ஏற்படாமல் இருக்க, அவசியம் 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டு கொள்ளுங்கள்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியதில் இருந்தே மனிதர்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் பயத்துடனே செல்கிறது. கொரோனாவின் இரண்டாம் அலைக்கு பிறகு கடந்த சில மாதங்களாக தான் நிம்மதியாக இருந்து வந்தோம். தற்போது மீண்டும் புதுவித ஓமைக்ரான் கொரோனா வகை உலகளவில் பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இதுவரை ஓமைக்ரான் கொரோனாவால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதனால் மக்கள் மீண்டும் பீதியில் உள்ளனர்.

  குழந்தைகளுக்கு தடுப்பூசி : இந்த புதிய ஓமைக்ரான் கொரோனா பெரியவர்களை விட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. எனவே இதனால் பெரியவர்களை போன்று குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசியை கொண்டு வரவேண்டும் என்று பல தரப்பினர் கூறி வருகின்றனர். இதை தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்களும் கேட்டு கொண்டுள்ளனர். அமெரிக்கா போன்ற சில நாடுகளில் 5-18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவிலும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

  உலகளவில் தடுப்பூசிகள் : கொரோனா பெருந்தொற்றுக்கு பெரியவர்களை போன்று குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படவில்லை. இதனால் தான் உலகளவில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை பெரிதாக கருதப்படவில்லை. அதனால் தான் கொரோனா தடுப்பூசிகளை பெரியவர்களுக்கு அதிக அளவில் செலுத்தினர். உலகளவில் இதுவரையில் இது போன்று எந்த நோயிற்கு அதிக அளவிலான தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Also Read : பீகார் கொரோனா பரிசோதனை பட்டியலில் மோடி, அமித்ஷா, பிரியங்கா சோப்ரா பெயர்கள் இடம்பெற்றதால் சர்ச்சை!

  நாடுகளின் பட்டியல் : குழந்தைகளுக்கு கொரோனாவால் எந்தவித பாதிப்பும் வர கூடாது என்பதற்காக பல்வேறு நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின், சுவீடன், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, கனடா, அர்ஜென்டினா, கியூபா, கொலம்பியா, ரஷ்யா, நார்வே, பஹ்ரைன், இஸ்ரேல், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் குழந்தைகளை கொரோனாவில் இருந்து பாதுகாக்க தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.

  தடுப்பூசி அவசியமா?

  லண்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 12 வயதுடைய குழந்தைகளுக்கு 1 டோஸ் தடுப்பூசி மட்டுமல்லாது 2 டோஸ் தடுப்பூசிகளை போட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் ஓமைக்ரான் கொரோனா வேகமாக பரவி குழந்தைகளை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதே. இந்த வகை கொரோனா எந்த அளவிற்கு மோசமானது என்று இன்னும் அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Also Read : மாடல் அழகியை ஃபோட்டோஷூட் என வரவழைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்

  எதிர்ப்பு சக்தி

  கொரோனா நோய் தொற்றுடன் போராட நமக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை தடுப்பூசிகளால் மட்டுமே தர முடியும். அந்த வகையில் பெரிய பாதிப்பு எதுவும் நமக்கு ஏற்படாமல் இருக்க தடுப்பூசி மிக அவசியமாகும். அதனால் தான் உலகளவில் எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துக்கூறி தடுப்பூசிகளை கட்டாயம் போட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Omicron