Home /News /national /

சனி, ஞாயிறுகளில் பேருந்து போக்குவரத்து ரத்து - கொரோனா பரவலால் பெங்களூருவில் கடும் கட்டுப்பாடு

சனி, ஞாயிறுகளில் பேருந்து போக்குவரத்து ரத்து - கொரோனா பரவலால் பெங்களூருவில் கடும் கட்டுப்பாடு

கேரளா மற்றும் மகாராஷ்டிரா எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவாவை ஒட்டியுள்ள பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பெங்களூருவில் வார இறுதி நாட்களில் பேருந்துகள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி 8,9, 15,16 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் அரசுப் பேருந்துகள் இயங்காது.

    இருப்பினும் மிக அத்தியாவசிய பணிகளை கவனத்தில் கொண்டு 10 சதவீத பேருந்துகள் மட்டும் வார இறுதி நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க : 11 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட முதியவர் - எப்படி சாத்தியம்?

    கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அரசு முக்கிய ஆலோசனை நடத்தியது. இதன்முடிவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஆரம்பமாகும் ஊரடங்கு திங்கள் கிழமை காலை 5 மணி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தியேட்டர்கள், மால்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்டவை 50 சதவீத திறமுடன் செயல்படலாம். பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே நடமாட முடியும்.

    இதையும் படிங்க : Tamil News Live | தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது

    திருமண நிகழ்வுகளில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள அனுமதியில்லை. பொது இடங்களில் நடைபெறும் திருமணங்களில் அதிகபட்சம் 200 பேர் கலந்து கொள்ளலாம். உள் அரங்கில் நடைபெறும் திருமணங்களில் 100 பேருக்கு அதிகமானோர் பங்கேற்க அனுமதியில்லை.

    இதனை தவிர்த்து கேரளா மற்றும் மகாராஷ்டிரா எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவாவை ஒட்டியுள்ள பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க :  தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு - அமைச்சர் அறிவிப்பு

    தற்போது வரை கர்நாடகாவில் 149 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. படுக்கைகளின் எண்ணிக்கைக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: CoronaVirus, Omicron

    அடுத்த செய்தி