Home /News /national /

3 டோஸ் தடுப்பூசி போட்டும் 29 வயது இளைஞருக்கு ஓமைக்ரான் பாதிப்பு - பகீர் தகவல்

3 டோஸ் தடுப்பூசி போட்டும் 29 வயது இளைஞருக்கு ஓமைக்ரான் பாதிப்பு - பகீர் தகவல்

Omicron

Omicron

மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, அந்த இளைஞர் கடந்த நவம்பர் 9ம் தேதியன்று அமெரிக்காவிலிருந்து மும்பை விமான நிலையம் வந்துள்ளார்.

    அமெரிக்காவில் இருந்து மும்பை திரும்பிய இளைஞர் ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் 3 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பவர் என தெரியவந்துள்ளது.

    கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் எனும் கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட், உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய டெல்டாவை விட பல மடங்கு வேகத்தில் இது பரவும் எனவும், கொரோனா தடுப்பூசியின் திறனையும் செயலிழக்கச் செய்யும் என்பதும் ஓமைக்ரான் மீதான அச்சத்தை பெரிதுபடுத்தியிருக்கிறது. தமிழகம் உட்பட இந்தியாவில் இதுவரை 111 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா பாதித்துள்ளது.

    இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து கடந்த நவம்பர் 9ம் தேதியன்று மும்பை திரும்பிய நபருக்கு ஓமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருப்பது சமீபத்தில் தெரியவந்தது. 29 வயதாகும் அந்த இளைஞர், 3 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பவர் என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

    இதையும் படிங்க:  ஓமைக்ரான் இந்தியாவில் பரவினால் தினசரி 14-15 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்- வி.கே.பால் எச்சரிக்கை

    பொதுவாக கொரோனா வைரஸுக்கு எதிராக கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசிகளை இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டால் கொரோனாவிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. ஆனால் இந்த நபர் 3 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்த போதும் அவர் ஓமைக்ரான் பிடியில் சிக்கியிருப்பது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

    மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, அந்த இளைஞர் கடந்த நவம்பர் 9ம் தேதியன்று அமெரிக்காவிலிருந்து மும்பை விமான நிலையம் வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வீட்டில் தனிமையில் இருந்த அந்த நபருக்கு கொரோனா உறுதியானதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதே நேரத்தில் ஓமைக்ரான் சோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்ட நிலையில் அவர் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஒமைக்ரானால் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படலாம் - தடுப்பூசி தேவை

    இந்த இளைஞர் அமெரிக்காவில் Comirnaty என்ற பிராண்டில் விற்பனையாகி வரும் Pfizer-BioNTech நிறுவனத்தின் 3 டோஸ் தடுப்பூசிகளை போட்டுள்ளார். அமெரிக்காவில் இரண்டு டோஸ்களை கடந்து 3வதாக பூஸ்டர் டோஸும் போட்டுக்கொள்ள வழிவகை உள்ளது. அமெரிக்காவின் Pfizer தடுப்பூசியானது ஜெர்மனியின் BioNTech நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டதாகும்.

    பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் அறிகுறிகள் இல்லாமல் இருந்து வருவதாகவும் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Corona Vaccine, Covid-19 vaccine, Omicron

    அடுத்த செய்தி