Home /News /national /

''இந்தியாவில் அடுத்த சில நாட்களில் ஒமைக்ரான் பரவல் மேலும் அதிகரிக்கும்'' : ஆய்வில் தகவல்

''இந்தியாவில் அடுத்த சில நாட்களில் ஒமைக்ரான் பரவல் மேலும் அதிகரிக்கும்'' : ஆய்வில் தகவல்

Omicron

Omicron

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஒமைக்ரான் அச்சுறுத்தல் பெருகியுள்ள சூழலில் டெல்லி அரசு மீண்டும் ஊரடங்கு விதிகளை கடுமையாக்கி உள்ளது

    இந்தியாவில் அடுத்த சில நாட்களில் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும் என்று மருத்தவ வல்லுனர்கள் நடத்தியுள்ள ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் நிலவவும் மக்கள்தொகை நெருக்கம் ஒமைக்ரான் பரவலுக்கு முக்கிய காரணமாக அமையும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் தொடர்பாக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் நடத்தியுள்ள ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது-

    அடுத்த சில நாட்களில் அல்லது ஒரு வாரத்திற்குள்ளா இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும். அங்கு 6 மாநிலங்களில் தற்போது ஒமைக்ரான் பரவல் அதிகமாக காணப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பாக மேலும் 11 மாநிலங்களில் ஒமைக்ரான் கூடுதலாக பரவி இருந்தது. இதற்கு மக்கள் தொகை நெருக்கமாக இருப்பது முக்கிய காரணம். முதலில் கடுமையாக அதிகரித்து பின்னர் படிப்படியாக பாதிப்புகள் குறையத் தொடங்கும்.

    பொதுமக்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்கிறார்களோ அந்த அளவுக்கு, ஒமைக்ரானிடமிருந்து மனித சமூக காப்பாற்றப்படும். பல நாடுகளில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நிலைமையை இன்னும் ஆபத்தாக மாற்றும். எனவே இந்த விஷயத்தில் அதிக கவனத்துடனும், பொறுப்புடனும் மக்களும், அரசும் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்று மட்டும் 9,195 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 3 வாரங்களில் இல்லாத அளவுக்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also Read : டெல்லியில் அமலானது மஞ்சள் எச்சரிக்கை - பள்ளி, ஜிம், திரையரங்குகள் மூடப்பட்டன!

    ஒமைக்ரான் வைரஸை கட்டுப்படுத்துவதில் பூஸ்டர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இற்கிடையே, 15 முதல் 18 வரையிலானவர்களுக்கும் தடுப்பூசி போட்டுக் கெள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    Also Read : Omicron| டெல்டாவையும் மிஞ்சி விட்டது ஓமைக்ரான், பாதிப்பு கடுமையாக இருக்கும்- டாக்டர் ஃபாசி எச்சரிக்கை

    நேற்று முக்கிய திருப்பமாக மெர்க் அண்ட் கோ நிறுவனம் தயாரித்த மோல்னுபிராவிர் மற்றும் ரிட்ஜ்பேக் பயோ தெரபடிக்ஸ் நிறுவனம் தயாரித்த எல்.பி. ஆகிய 2 தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஒமைக்ரான் அச்சுறுத்தல் பெருகியுள்ள சூழலில் டெல்லி அரசு மீண்டும் ஊரடங்கு விதிகளை கடுமையாக்கி உள்ளது. அங்கு தியேட்டர்கள், பள்ளிகள் உள்ளிட்டவை பூட்டப்பட்டதுடன், உணவு விடுதிகள், வணிக நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    Also Read : ஆந்திராவில் பாஜக ஆட்சி அமைத்தால் மதுபானம் ரூ.50-க்கு விற்கப்படும் - பாஜக மாநில தலைவர் பேச்சால் சர்ச்சை!
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Omicron

    அடுத்த செய்தி