Home /News /national /

Omicron: ஒமிக்ரான் வகை கொரோனா அச்சுறுத்தல்: மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்!

Omicron: ஒமிக்ரான் வகை கொரோனா அச்சுறுத்தல்: மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்!

ஒமிக்ரான்

ஒமிக்ரான்

ஓமிக்ரான் கொரோனா காரணமாக தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக், நமீபியா, லெசோதோ மற்றும் ஈஸ்வதினி ஆகிய நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வர மாலத்தீவு தடை விதித்துள்ளது. 

    தென்னப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொடிய ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பல்வேறு நாடுகளுக்கும் பரவிவரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனைகளை அதிகப்படுத்துவது உட்பட சில அறிவுரைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

    தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட வைரஸ், அங்கு 6 பேருக்கும், போட்ஸ்வானாவில் 3 பேருக்கும், ஹாங்காங்-கில் ஒருவருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பெல்ஜியத்தில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் மீண்டும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது.

    உலக சுகாதார அமைப்பு, இந்த வைரஸுக்கு ஒமிக்ரான் என்று பெயரிட்டுள்ளது.  மேலும்,  மிகவும் ஆபத்தான பிரிவில் இந்த ஒமிக்ரான் வகையை  வகைப்படுத்தியுள்ளது.  ஒமிக்ரான் 30 முறைக்கும் மேலாக உருமாற்றம் அடைந்திருக்கிறது. அதேபோல், மனித செல்களை பற்றுவதற்கான  ஒமிக்ரான் வகை கொரோனாவின் கால்கள் (Spike Protein) 32 முறை உருமாற்றம் அடைந்துள்ளன என்று கூறப்படுகிறது.

    தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக், நமீபியா, லெசோதோ மற்றும் ஈஸ்வதினி ஆகிய நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வர மாலத்தீவு தடை விதித்துள்ளது.  தென்னப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலத்திலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: மாஸ்க் போடுங்க... கொரோனா இன்னும் ஓயவில்லை : பிரதமர் மோடி எச்சரிக்கை


    இந்நிலையில், மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு கொரோனாவின் ஒமிக்ரான் மாறுபாடு குறித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், தீவிர கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும் என்றும்  தடுப்பூசி செலுத்துவதை  அதிகரிக்கவும் கேட்டுக்கொள்கிறார். இந்த மாறுபாட்ட வைரஸ் கண்டறியப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளை கடுமையாக கண்காணிக்குமாறு மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார்.

    மேலும் படிங்க: டிச. 15 முதல் சர்வதேச விமான சேவைகளை துவக்கும் இந்தியா.. ரிஸ்க்கில் உள்ள நாடுகளின் பட்டியலும் வெளியீடு.!

    Published by:Murugesh M
    First published:

    Tags: Central govt, Corona

    அடுத்த செய்தி