ஹோம் /நியூஸ் /இந்தியா /

மாஸ்க் போடுங்க... கொரோனா இன்னும் ஓயவில்லை : பிரதமர் மோடி எச்சரிக்கை

மாஸ்க் போடுங்க... கொரோனா இன்னும் ஓயவில்லை : பிரதமர் மோடி எச்சரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்ட ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நாட்டில் கொரோனா பாதிப்புகள் இன்னும் ஓயவில்லை என்று எச்சரித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பொதுமக்கள் மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை கைவிடக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

மனதின் குரல் எனப்படும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசியதாவது-

இன்னும் 2 நாட்களில் டிசம்பர் மாதம் வந்து விடும். 1971-ல் நடந்த போரின்போது நாம் பாகிஸ்தானை வீழ்த்தினோம். அதன் பொன்விழா ஆண்டு அடுத்த மாதம் 16-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில், நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் நினைவை நான் போற்றுகிறேன்.

இந்தியாவுக்காகவும், சமூகத்திற்காகவும் அம்பேத்கர் தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார். அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதில் அவருடைய பங்களிப்பு மகத்தானது. இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்பை உணர்ந்து, கடமைகளை நிறைவேற்ற வேண்டும். இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக ஓயவில்லை என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுமக்கள் மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை கைவிடக் கூடாது.

இவ்வாறு மோடி பேசினார். உலக நாடுகளில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் மோடி இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்ட ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளன.

தென்னாப்பிரிக்கா, நமீபியா, போத்ஸ்வானா உள்ளிட்ட தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு பயணிகள் சென்ற வகையில் ஹாங்காங், ஐரோப்பிய நாடுகளிலும் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் கோரிக்கை வைத்திருந்தார். இருப்பினும் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. முன்பை விட சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

First published:

Tags: Corona, Modi, Omicron